நல்லோரது நட்பு இனிய சொற்களை பேசுதல், அகத்தூய்மை, எளியோருக்கு உதவுதல், ஆகிய அனைத்தும் கொண்டவர்கள் மேன்மக்கள்.
ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் கடவுளின் ஒளி இருக்கிறது. எல்லோரையும் சமமாக நடத்துவதும் சமமாக பாராட்டுவதும் மனிதப் பண்பாகும்.
சத்தியமும் அன்பும் அருளும் வாழ்வில் மலர்ந்துவிட்டால் நாம் கடைத்தேறி விட்டோம் என்று ஆகும். இல்லையில் நம் வாழ்க்கையே பாழாகிவிட்டது என்று கொள்ள வேண்டியதுதான்.
குழந்தை பருவத்திலேயே இறைவனின் அருள் வடிவத்தை பற்றி பெற்றோர்கள் அவர்களிடம் சொல்லி விட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வளரும் பருவத்தில் தெய்வ நம்பிக்கையுடன் வளருவார்கள்.
சாம்ராஜ்யம் செல்வம் அழகு பெருமை இளமை இவை ஐந்தும் ஆத்ம ஞானத்தை அபகரிக்கும் திருடர்கள். இறைவனுடைய சங்கல்பத்தினால்தான் சிலர் உயர்ந்தவர்களாகவும் சிலர் தாழ்ந்தவர்களாகவும் பிறக்கிறார்கள்.
ஏக்கம் நிறைந்த வாழ்வில் இறைவனைப் பற்றிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். அந்த குழப்பத்தை நீக்க இறைவனின் பிரகாசமான ஒளி வேண்டும். அதனால் இறைவனை முழுமனதுடன் வணங்குங்கள் குழப்பம் நீங்கிவிடும்.
பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை. திருப்தியினும் உயர்ந்த இன்பம் இல்லை. ஆசையினும் பெரிய தீமை இல்லை. கருணையிலும் பெரிய அறம் இல்லை. மன்னித்தலினும் ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.
அறம் எனும் நீரில் நீராடி வாய்மை எனும் வாசனை திரவியத்தை உடலில் பூசு அப்போது உன் முகம் பேரொளியுடன் திகழும் கொடுக்கும் தெய்வம் உன் மேல் ஆயிரக்கணக்கான அன்பளிப்புகளை அள்ளிக் குவிப்பார்.
நன்மை செய்தவருக்கு திருப்பி நன்மை செய்வது உலக வழக்கமானால் தீமை செய்தவருக்கும் நன்மை செய்வது உத்தமர் வழக்கம்.
தத்தளித்த நீர் மேல் நிமிர்ந்து உயர நிற்கும் தாமரை போலவோ, நீரினால் பாதிக்கப்பட முடியாத இறக்கைகளுடன் காட்டிலே உயர பறக்கும் கடல் பறவை போலவோ இவ்வுலகில் நீங்கள் வாழ்க்கை நடத்துங்கள்.