சோர்வடைந்தபோது உற்சாக வார்த்தைகள் வெற்றியைத் தரும்!

Encouraging
Encouraging
Updated on

சிலர் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும்பொழுது நம்மால் இதை செய்துவிட முடியுமா? என்ற தயக்கத்துடன் ஆரம்பிப்பது உண்டு. இன்னும் பலர் நம்மால் முடியும் என்று தீர்க்கமாக தெளிவாக ஆரம்பிப்பதும் உண்டு. சிலர் பாதியில் தடுமாறுவது உண்டு.

ஒரு ஆபரேஷன் செய்யும் டாக்டருக்கு பக்கத்தில் இருப்பவர்கள் எப்படி உறுதுணையாக இருக்கிறார்களோ அதேபோல், ஒரு சாதனையை செய்யும் சாதனை யாளருக்கு அவரை ஏற்றிவிடும் ஏணியாக, தோணியாக ஒவ்வொரு சூழ்நிலையிலும் கை  தூக்கிவிட்டு உற்சாக வார்த்தை கூறி வளர்த்துவிட்டவர்கள் மிகவும் பாராட்டத்தக்கவர்கள். அவர்களின் பெயர்கள் எல்லாம் வெளியில் தெரியாது என்றாலும் அவர்களின் சேவை மகத்தானது. பாராட்டத்தக்கது.

அதுபோல் ஒரு சோர்வடைந்த மனதை மற்ற மிருகங்கள் எப்படி தேத்தி விடுகிறது என்பதை ஒரு குட்டி கதை மூலம் தெரிந்து கொள்வோம். மலை உச்சிக்கு செல்லவேண்டும் என்று சிங்கம் விரும்பியது. ஒருநாள் மலை உச்சிக்கு செல்லுமாசையில் மலையேறத் தொடங்கிய சிங்கம் பாதி தூரம் ஏறியதும் களைப்படைந்தது. நாம் கண்டிப்பாக மலை உச்சிக்குச் செல்லத்தான் வேண்டுமா? இல்லை தரையில் இறங்கி விடலாமா? என்ற யோசனையில் நின்றது சிங்கம்.

இதையும் படியுங்கள்:
அதிர்ஷ்டத்தை விட உழைப்பின் மீது நம்பிக்கை: ஒரு நாணயத்தின் கதை!
Encouraging

அந்த நேரத்தில் சிங்கத்தின் அருகில் குரங்கு வந்தது.  சிங்கராஜாவே பலமான யோசனையா என்று கேட்டது. குரங்கே நான் இந்த மலை உச்சிக்கு ஏறவேண்டும் என்ற ஆசைப்பட்டு விட்டேன். ஆனால் மலை உச்சி வரையிலும் என்னால் ஏறமுடியுமா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்றது சிங்கம். சிங்க ராஜாவே மனம் கலங்காதீர்கள். முயற்சியில் இருந்து பின் வாங்காதீர்கள். இன்னும் ஊக்கத்துடன் மலை. ஏறுங்கள். விரைவில் மலை உச்சியை அடைந்துவிடலாம் என்றது குரங்கு.

சிங்கம் மீண்டும் உற்சாகத்துடன் மலை ஏறத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மலை உச்சியை அடைந்தது. மலை உச்சியில் நரி ஒன்று இருந்தது. அந்த நரி சிங்க ராஜாவுக்கு தேனடை கொடுத்து உபசரித்தது. அப்போது சிங்கம் முயற்சியில் இருந்து பின்வாங்க கூடாது என்பதை இவைகளின் வார்த்தைகள் கொடுத்த உற்சாகத்தின் மூலம் தெரிந்துகொண்டது.

நாம் சோர்வடைந்து இருக்கும்பொழுது உற்சாக வார்த்தையை கொடுத்து ஊக்குவிப்பவர்கள்தான் நம்மை வெற்றியடைய வைப்பவர்கள். ஆதலால் எப்பொழுதும் ஊக்கம் உள்ள வார்த்தையை பேசுவோம். அதுவே உற்சாகத்தை கொடுக்கும். மென்மேலும் எடுக்கும் செயல்களில் வெற்றி அடையவைக்கும்  என்பது உறுதி. 

logo
Kalki Online
kalkionline.com