
எனக்கு இருக்கும் கால் பங்கு திறமை கூட என் மேனேஜருக்குக் கிடையாது. ஆனால் அவருக்குக் கீழ் நான் பணியாற்ற வேண்டியிருக்கிறது என்று பலரிடம் இப்படியொரு புலம்பல் இருக்கும். அதே சமயம் அவருடைய இடத்தில் நீங்கள் இருந்தால் மட்டும் சரியாகச் செய்து விடுவீர்கள் என்ற உதிதிரவாதம் உள்ளதா?. ஒருமுறை அமெரிக்காவுக்கு போப் வந்திருந்தார். அவரை அழைத்துச்செல்ல சொகுசு கார் வந்திருந்தது. போப் அதுவரை அப்படியொரு காரில் பயணம் செய்ததில்லை. நெடுஞ்சாலைக்கு வந்ததும் அந்தக் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று அவருக்கு ஆசை வந்து விட்டது. முதலில் தயங்கிய டிரைவர் போப் கேட்டதால் மறுக்க முடியாமல் சம்மதித்தார்.
போப் காரைப் பார்த்ததும் குஷியாகிவிட்டார். சக்தி வாய்ந்த என்ஜின் பொருத்தப்பட்ட அந்த கார் வேகம் எடுத்தது. நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்துக்கு மேல் சீறிப் பாயும் காரைப் பார்த்து போலீஸ்கார்கள் துரத்தின. ஒரு கட்டத்தில் போப் ஓட்டிய காரை ஓரம் கட்டப்பட்து. விசாரிக்கச் சென்ற அதிகாரி போப்பைப் பார்த்து பின்வாங்கினார். தனியே ஒதுங்கி மேலதிகாரிக்கு போன் செய்து காரின் பின்னால் இருக்கும் வி.ஐ பி யாரென்றே தெரியவில்லை. ஆனால் போப்பையே டிரைவராக வைத்திருக்கிறார் என்று கூறினார்.
இப்படித்தான் யார் எந்த இருக்கையில் அமர்ந்திருக் கிறார்கள் என்பதைப் பொறுத்து சமூகத்தில் அவரது அந்தஸ்து அமையலாம். எந்த ஒரு ஒருதிறமை இல்லாமல் தற்செயலாக அதிகாரி அவர் அங்கு வந்து சேர்ந்திருந்தால் அதிக காலம் தாக்கு பிடிக்க முடியாது.
நீங்கள ஒரு ஸ்டெனோகிராபர் என்று வைத்துக் கொள்வோம். என் அதிகாரிக்கு டைப்ரைட்டரில் எந்த எழுத்து எங்கே இருக்கிறது என்பது கூட தெரியாது. அவருக்குக் கீழ் வேலை செய்யணும்னு என் தலையெழுத்து என்று நீங்கள் புலம்பலாமா? ஒரு சூப்பர்வைசர் தொழிலாளர்கள் செய்யும் எந்த தனிப்பட்ட பணியிலும் திறமையில்லாதவராக இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக எல்லோருடைய திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதில் சூரராக இருக்கலாம்.
உங்களுடைய சில திறமைகள் உங்கள் பாஸிடம் இல்லாமல் போகலாம். ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து சமாளிக்கும் அவர் திறமை உங்களிடம் உள்ளதா?. உங்கள் பாஸைவிட நீங்கள் திறமையானவராக இருந்தால் அதை கம்பெனி அறிந்தால் உங்களைத்தானே பதவியில் அமர்ந்துவார்கள். அதைவிட்டு விட்டு அவரைப் பற்றி மனதில் புழுங்கினீர்களானால் உங்களால் முழு ஈடுபாட்டுடன் செயலாற்ற முடியாது.
நீங்கள் இல்லாவிட்டாலும் கம்பெனி நடக்கும் என்ற நிலை உருவாகிவிடும். வாழ்க்கையில் முன்னேறிச் காட்டியவர்கள் யாரும், அடுத்தவர் மீது புகார் சொல்லிக் கொண்டு நேரத்தை வீணடிப்பதில்லை. அவர்களுடைய முழு திறமையையும் பயன்படுத்திச் செயலாற்றினார்கள். உயரத்திற்கு வந்தார்கள். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் மனப்பூர்வமாக செயலாற்றுங்கள். உங்கள் திறனுக்கேற்ற உச்சத்தை அடைவீர்கள். உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.