தயக்கம் இருக்க வேண்டியது எதில் தெரியுமா?

motivation image
motivation imageImage credit - pixabay.com

சாதாரணமாக எல்லா நேர்மறை கருத்துக்களைக் கூறும் பொழுதும் எல்லோருடைய முகங்களும் சந்தோஷத்தில் மிளிர்வதைக் காணலாம். அதே சில நேரங்களில் சில தவறுகள் நேர்ந்து விட்டால் அப்பொழுது அதை சுட்டிக்காட்டினாலோ, கோபத்தை வெளிப்படுத்தினாலோ அதை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது.  தயக்கம் இருக்க வேண்டியது எதில் என்பதை இப்பதிவில் காண்போம். 

எந்த ஒரு விஷயத்திலும் லேசாகக்கூட கோபப்படாமல் அந்த விஷயத்தைப் பற்றி பேசினால்தான் வீட்டில் உள்ளவர்களும் சரி, வெளியில் இருப்பவர்களும் சரி அனுசரித்துப் போவார்கள். அதை விடுத்து கொஞ்சம் முகம் சுளித்து விட்டால் போதும். அது சரியான சிடுமூஞ்சி என்று பெயர் சூட்டி விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால், எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க வேண்டும் என்றால் அங்கே கோபம் இருந்தால் சரி வராது. எப்பேர்ப்பட்ட மனிதனையும் வீழ்த்தும் ஒரு ஆயுதம் உண்டு என்றால் அது கோபம் தான்.

இன்னும் சிலர் 'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' என்பார்கள். இன்னும் சிலருக்கு கோபம் எப்பொழுது வரும் என்றால், ஒருவரிடம் ஒரு வேலையை இவர் நன்றாக செய்வார் என்று  முழு நம்பிக்கையுடன் ஒப்படைத்து இருப்பார்கள். அப்படிப்பட்டவர் அன்று சிறு தவறுதலாக ஏதோ ஒன்றை அங்கு செய்திருப்பார். அதைப் பார்த்தவுடன்  இவரை நம்பினோமே என்று பொறுமைசாலியாக இருக்கும் அவரும் கோபப்படுவதைக் காணலாம். 

ஒருமுறை  நீ செம்பருத்தி பூ டீ நன்றாக போடுவாய். அதை போட்டு வா என்று கூறி நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் அண்ணா. தங்கை அழகாக டீ போட்டு அதை இறுக்கும் லோட்டாவில் இருந்த தண்ணீரை பார்க்காமல் அதில் வடிகட்டி  அப்படியே கொடுத்து விட்டாள். டீ யின் ருசி, மணம் எல்லாம் மாறிவிட்டது. அதைக் குடித்தபோது அண்ணனுக்கு வந்ததே கோபம். அதுவும் அவர் நண்பருடன் சேர்ந்து அருந்தும் போது... இதெல்லாம் சூழ்நிலையால் வரும் கோபம். 

இதையும் படியுங்கள்:
மாலை நேர சோர்வே... போ போ போ!
motivation image

நபிகள் நாயகம் தம் தோழர்களிடம் வலிமை உள்ளவன் யார்? என்று கேட்டார். அதற்கு அவர்களுள் ஒருவன், "எவன் மக்களை வீழ்த்துகிறானோ அவனே வலிமை உள்ளவன் " என்றனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் இல்லை, இல்லை." கோபம் வரும்போது யார் அப்போது அடக்கி ஆள்கின்றானோ அவனே வலிமையானவன்" என்றார். 

சில நேரங்களில் அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே... கோபத்தை வெளிப்படுத்தும் போதும் தயக்கம் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்...! 

உலகத்தில் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ வேண்டும். அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, பிறர் நலம் முதலிய மனித பண்புகளை கொண்ட மனிதர்களாய் வாழ்வோம்! கோபத்தைத் தூக்கித் தூரப்போடுவோம்! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com