அனைவரும் வாழ்வில் திட்டங்களை நிறைவேற்றும் அனுபவங்களை நிறைய பெற்றுள்ளோம். திட்டங்களை நிறைவேற்றும்போதே தடைகள் ஏற்படலாம். இத்தடைகள் நம் முயற்சிகளை தகர்த்தெறியும் என்று தோன்றும். போராட்டம் இன்றி எந்த ஒரு செயலையும் , நோக்கத்தையும் அடைய முடியாது. சூழ்நிலையை தீர ஆராயுங்கள். தேவையானால் வேகத்தைக் குறையுங்கள். ஓய்வெடுங்கள். செயல்முறைகளை பரிசீலனை செய்யுங்கள். ஆனால் ஒரு போதும் கனவினைக் கலைத்துவிடாதீர்கள். இடையூறுகளும், தோல்விகளும், தாமதங்களும் உங்கள் நோக்கத்தைக் தடுப்பதில்லை. தடைகளைத் காரணம் காட்டி வெளியேறினால் கண்டிப்பாக உங்கள் விருப்பம் நிறைவேறாது.
தெருவிளக்கின் வெளிச்சத்தில் படித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி திரு. முத்துசாமி ஐய்யர் அந்த இடத்தைப் பிடிக்க எத்தனை இன்னல்களை எதிர் கொண்டார் என்பதையும், வெள்ளைக்கார நீதிபதியே தன் குடும்பத்தோடு உட்கார்ந்து வாதங்களைக் கேட்கும் அளவிற்கு தனது ஆங்கிலப் பேச்சாற்றலால் வியக்க வைத்த திரு.சடகோபாச்சாரியார் போன்ற தமிழ்நாட்டு அறிவு ஜீவிகளையும் நம் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
முயற்சி செய்கிறவர்களே தனிப்பட்ட இலக்குகளையும், தொழில் இலக்குகளையும் எட்டிப்பிடிக்கின்றனர். சவால்களையும், அவைகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது பொறுத்து உங்கள் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. பெரும்பாலானோர் தேவைக்கு ஏற்ப திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தியே வெற்றி காண்கிறார்கள்.வெற்றி பெறும் வரை முயற்சி செய்தாக வேண்டும். இறுதியான முயற்சி எது என்பது உங்களுக்குத் தெரியாது.
உங்கள் அடுத்த முயற்சி கூட வெற்றி தரும் முயற்சியாக இருக்கலாம். எனவே வெற்றி வாய்ப்பினை நழுவ விடாதீர்கள். பல நேரங்களில் முடியாது என்று கருதிவிட்டு விட்டு வந்த காரியங்கள் இன்னொருவரிடம் சென்றடைவதைக் காணமுடியும். அவர் வெற்றி பெறும் போது, நீங்கள் அவ்வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருந்தீர்கள் என்று தெரியவரும். ஒருவேளை நீங்கள் இன்னொருமுறை முயன்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பீர்கள். நீங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு முயற்சியை கைவிடாதிருந்தால் அது நடந்திருக்கும்.. உங்கள் இலக்குகளையும், கனவுகளையும் கைவிடாதீர் கள். இலக்குகளை எட்டும் முயற்சி தோல்வியைத் தழுவும் போது விட்டு விடாதீர்கள். நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதற்கும் , யாராக இருக்கிறீர்கள் என்பதற்கும் உள்ள இணைப்புப் பாலம் உங்கள் விடாமுயற்சிதான்.