உங்கள் எண்ணங்கள் உங்கள் விதியை தீர்மானிக்கும்!

Your thoughts will lift you up!
good thoughts...Image credit -- pixabay
Published on

ம் எண்ணங்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  அவை உங்கள் வார்த்தைகளாக மாறும்.  வார்த்தைகளே செயல்களாக உருவாகும்.  செயல்கள் பற்றியும் விழிப்பாக இருங்கள். உங்கள் செயல்களே உங்கள் பழக்க வழக்கமாகும். உங்கள் பழக்கவழக்கம் குறித்தும் கவனமாக இருக்கவேண்டும்.  அவைகளே உங்கள் குணமாகும். உங்கள் குணம் குறித்தும் கவனமாக இருங்கள் உங்கள் குணம் உங்களின் விதியை தீர்மானிக்கும்.

பண்டைய சீனாவின் அத்புதமான இவ்வார்த்தைகளை வைத்து செயலாற்ற வேண்டும். உங்கள் விதியை உங்களால் வகுக்க முடியும்.மாற்றவும் முடியும். விதியைக் தீர்மானிக்க வேண்டுமெனில் , எண்ணத்தைச் செப்பனிடுவதிலிருந்து முயற்சிக்க வேண்டும். விதியை மதியால் வெல்லலாம் என்பதன் அர்த்தம் மதி எண்ணத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது என்பதுதான். நாம் என்ன எண்ணுகிறோம் என்பது நமக்குத் தெரியாமலேயே வார்த்தைகளாக. வெளிப் பட்டுவிடுகிறது.

அந்த வார்த்தைகள்தான் மற்றவர்களின் காதில் எதிரொலித்துக்  கொண்டே இருக்கும். நம் வார்த்தைகள் நாம் எதைப் பற்றி எப்படி உணர்கிறோம்  என்பதை வெளிக்காட்டி விடுகிறது.  மனதின் ஆழத்தில் என்ன நடக்கிறது. என்பதை  வார்த்தைகளே நமக்கும், மற்றவர்களுக்கும் படம் பிடித்துக் காட்டுகிறது. நம் சந்தோஷம்,வருத்தம்,அன்பு,கனவுகள் போன்ற எண்ணங்களை வார்த்தைகளால்தான் வெளிப்படுத்துகிறோம்.

நம் வார்த்தைகள் செயல்களை உருவாக்கும்.நம் எண்ணங்கள் மிகப் பெரிய காரியங்களை செய்து முடிக்க நம்மை ஊக்குவிக்கும்‌. எண்ணங்கள் வார்த்தைகள் ஆகி மற்றவர்களையும் ஊக்குவிக்கிறது.  வார்த்தைகளால் அமைதிப்படுத்தும் முடியும், அமைதிக்கு எதிராக தூண்டவும் முடியும்.  வார்த்தைகள் சமுதாயத்தை மாற்றும் சக்தி படைத்தவை. எனவே எழும் எண்ணங்களையும், எண்ணத்தால் உருவாகும் வார்த்தைகள் குறித்தும் கவனமாக இருங்கள்.

நமக்கு வெற்றி தரும் செயல்களையே தொடர்ந்து செய்கிறோம்.  சில தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிறோம். நாம் அறியாமலேயே சிறிய பழக்கங்களைக் தொடர்கிறோம். குழப்பமாக இருப்பது,உரக்கப் பேசுவது, கோபப்படுவது என்று இருக்கிறோம்.இத்தகைய பழக்கங்கள் நம்மை யாரென்று அடையாளம் காட்டிவிடும்.  நாம் மற்றவர்களைப் பற்றி விவரிக்கும்போது அவர்கள் குணத்தை முன்னிலைப்படுத்துகிறோம்.

இதையும் படியுங்கள்:
சாதிக்கத் தூண்டும் பொன்மொழிகள்..!
Your thoughts will lift you up!

அதே போல்தான் நம் குணமே நம்மைப் பற்றிய முகவரியாகிறது. தொடர்ந்து எண்ணும் எண்ணங்களாலும் செயல்களாலும்  நம் பழக்கங்கள் தீர்மானிக்கப் படுகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் நிரம்பியிருந்தால் மற்றவர்கள் செய்வது தவறாகத் தெரிகிறது. இதனால் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கும் பழக்கமும் உருவாகிறது. இந்த சுழற்சியில் சிக்கும்போது எதிர்மறை பழக்கங்கள் நிலையாகிறது. 

நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சியைத் தருவதால் செயல்களின் கடினத்தன்மை மறையும். நடவடிக்கைகளும், வார்த்தைகளும், வழிமுறைகளும், நம்பிக்கையும்  மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் போது மகிழ்ச்சியான தரருணங்கள் அதிகரிக்கின்றன. இலக்கை நோக்கிய  பயணத்தில் தடைகள் ஏற்படலாம். ஆனால் அவை நேர்மறை எண்ணங்களுக்கும் குந்தகம் விளைவிப்பதில்லை. நேர்மறை எண்ணங்கள் காரணமாக  மற்றவர்கள் நம்முடன் இருப்பதையே விரும்புவார்கள். நம் செயல்கள் பாராட்டப்படும். உயர் நிலைகளை எட்ட இவ்வெண்ணங்கள் தொடர்ந்து நம்முடன் இருந்து செயலாற்றும். எனவே உங்கள் எண்ணங்கள் குறித்து எப்போதும் கவனமாக இருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com