No Excuses: சாக்கு போக்குகளின் பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்கள்!

Zion Clark
Zion Clark
Published on

நாம் பல பேருடைய கடினமான வாழ்க்கை நிகழ்வுகளைக் கடந்து வந்திருப்போம். நாம் எவ்வளவு காலம் உயிர்வாழப் போகிறோமோ அதுவரையிலும் இதுபோன்ற நிகழ்வுகள் பலவற்றை கேள்விப்பட்டதான் போகிறோம். ஆனால் தற்போது நான் கூறப்போவது சற்று வித்தியாசமானது. 

பிறக்கும் போதே இரு கால்களும் இல்லாமல் பிறந்த ஒருவன், எப்படி தன் வாழ்வில் சாதித்தான் என்ற கதை. நிச்சயம் நீங்கள் அவரிடத்தில் இருந்தால் இதை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். caudal regression syndrome எனப்படும் மருத்துவக் குறைபாட்டால் பிறக்கும்போதே இருகால்கள் இல்லாமல் பிறக்கிறான் Zion Clark.

இதனால் தன் பெற்றோராலேயே பிறருக்கு தத்துக் கொடுக்கப்படுகிறான். கால்கள் இல்லை என்பதால், பல அவமானங்கள், கேலி கிண்டல்களை சந்திக்க நேர்கிறது. பிறர் உதவியில்லாமல் இவனால் வாழவே முடியாது என்று ஏளனம் செய்கிறார்கள். இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் அவனுக்கான துறையைத் தேர்ந்தெடுத்தான் Zion. 

அவன் என்ன துறையைத் தேர்ந்தெடுத்தான் தெரியுமா?

"எனக்கு கால்கள் இல்லை என்றால் என்ன? என் கைகளின் பலத்தை இவ்வுலகிற்கு காட்டுகிறேன்" என்று மல்யுத்தத்தைத் தேர்வு செய்தான்.

அவனுக்கு பக்க பலமாக நின்றார்கள் அவனுடைய வளர்ப்புத் தாயும், பள்ளி ஆசிரியரும். சிறு வயதிலிருந்தே அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டான். தன்னால் முடியாத பலதையும், தன் விடாமுயற்சியின் மூலம் வென்று காட்டினான்.

  • அவனைப் பார்த்து சிரித்த வாய்கள் மூடின.

  • அவனை சுட்டிக்காட்டி ஏளனம் செய்த கைகள் முடங்கின.

இன்று அவன் ஒரு Pro Freestyle Wrestler.

"No Excuses" என்ற பதாகையை தன் முதுகில் சுமந்தவாறே திரிகிறான்.

உங்களுக்கு நன்கு செயல்படும் இரு கைகள் இருக்கும்.

நன்கு செயல்படும் இரு கால்களும் இருக்கும்.

கண், மூக்கு, வாய் என அனைத்து பாகங்களும் சரியாக இருந்தும்,

உங்களுக்கான செயல்களைச் செய்ய, எது உங்களை தடுத்து நிறுத்துகிறது?

>No Excuses<

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com