பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை...

வாழ்வியல்
பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை...

படங்கள்; பிள்ளை

சாப்பாடுதான் முக்கியம், முதல்ல சாப்பாட்டுல இருந்து ஆரம்பிக்கலாம். சூப்பரா சமைக்கத் தெரியாவிட்டாலும், கொஞ்சம் சுமாராவாவது சமைக்க கற்றுக்கொள்ளுங்கள். இட்லியை உதிர்த்து போட்டு உப்புமா பண்ணனும்னு இல்லை… சாதாரண ரவை உப்புமாவும் ஓ.கே.தான்.

ங்க அம்மா என்னை மகாராணி மாதிரி வச்சிருந்தாங்க அப்படினு சொல்லிட்டு திரியாம, வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்ய கற்றுக் கொள்ளுங்கள். (முறுக்கு சுடுவது, இடியாப்பம் பிழிவதும் இதில் அடக்கம்).

 • ங்களுக்கு என்ன வேண்டும் என்பதை லிஸ்ட் போட்டு குப்பையில் போட்டுவிட்டு, என்ன தேவை என்பதை மட்டும் லிஸ்ட் போட்டு கடையில் வாங்க கற்றுக்கொள்ளுங்கள்.

 • க்கத்து வீடு, எதிர்த்த வீடு, மேல்வீடு, கீழ்வீடு, சொந்தக்காரங்க வீட்டுல இருக்குற பொருட்கள் எல்லாத்தையும் உங்க வீட்லயும் வாங்கி வைக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனம்னு தெரிஞ்சிக்கோங்க.

 • சேமிப்பு என்பது பொதுவா பெண்களோட ஒட்டிப்பிறந்த ஒன்று, அதனால் தினமும் குறைந்தது ஒரு பத்து ரூபாயாவது சேமிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

  • ம்முடைய பிரச்னைகளை, கவலைகளை மற்றவர் களிடம் சொல்வது சிலநேரங்களில் தவிர்க்க முடியாதது தான், ஆனால் அதை நம்பிக்கைக்குரிய ஒருவரிடம்தான் சொல்கிறோமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

 • ண்களிடமோ/ பெண்களிடமோ, பழகும்போது கெட்டவர்களை இனங்கண்டால் பேச்சை வளர்க்காமல் உடனடியாக துண்டித்துக் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.

 • ணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்பதற்காக எல்லாவற்றிலும் கொடி பிடிக்காதீர்கள், உங்கள் குடும்ப சம்பந்தப்பட்டவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது எந்த விதத்திலும் தவறில்லை என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

ன் காசுல உட்கார்ந்து சாப்பிடுற உனக்கு இவ்வளவு திமிரானு? கணவன் கேட்டா… பெட்டிய தூக்கிட்டு அம்மா வீட்டுக்கு போகணும், இல்ல உடனே வேலைக்கு போகணும்னு அவசியம் இல்ல. "நின்னு சாப்பிட்டா கால் வலிக்கும்", "உங்களை கட்டிக்கிட்டு வந்து இருக்கேன், இந்த வீட்ல சாப்பிட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு, அப்படிதான் சாப்பிடுவேன்" சொல்லி பிரச்னையை நகைச்சுவையா எடுத்துக்க கத்துக்கோங்க.

ம் வீட்டுக்கு ஒருவர் வந்துவிட்டால், அவர் நமக்கு பிடிக்காத ஒருவராக இருந்தாலும், அவரை சிரித்த முகத்துடன் உபசரிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

 • "மொத்தத்தில் பெண்கள் எப்போதும் பெண்கள்தான்" நாகரீகம் வளர்ந்து விட்டது என்பதற்காக நம் இயல்பை, பண்பாட்டை மறக்காமல் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com