செல்வத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரம்!

செல்வத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரம்!

கற்பூரத்தின் ஒரு வகையே பச்சை கற்பூரம். இதன் பயன்கள் பல‌உண்டு. பச்சை கற்பூரத்தை மருந்தாகவும், இனிப்புகளில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருளாகவும் உபயோகிக்கலாம். இது நல்ல வலி நிவாரணி என்பதால் தைலங்களிலும், அதன் தயாரிப்புகளில் உபயோகமாகிறது. சளி தொல்லையிலிருந்து விடுபடவும், வயிற்றுப் பிரச்சனைகளை தீர்ப்பதிலும் பச்சை கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.

இனிப்பு பலகாரங்களை நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிட வேண்டுமெனில் பச்சை கற்பூரத்தை சேர்த்து செய்ய அதே சுவையுடன் இருக்கும். பாக்டீரியாக்கள், பூஞ்சை தொற்றுக்கள் என எதுவும் பண்டத்தை பாழ் பண்ண விடாமல் தடுக்கும்.

பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக உள்ளது. இதன் வாசனைக்கு பெரிய சக்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்வத்தை தக்க வைக்கும் சக்தியையும் கொண்டுள்ளது. நிம்மதியையும், சந்தோஷத்தையும் தர வல்ல பச்சை கற்பூரம் என்றும் நம் வீட்டில் இருக்க தீங்கு நம்மை நெருங்காது.

துர்சக்தியை விரட்டி ஐஸ்வர்யம் அருளும் பச்சை கற்பூரம் பல நன்மைகள் தரவல்லது. பணம் புழங்கும் இடங்களில் இதை வைத்திருக்க பண வரத்து அதிகரிப்பதோடு, செல்வம் நிலைத்திருக்கும். பச்சை கற்பூரத்தை துணியில் முடிந்து குபேர மூலையில் வைத்து தூப தீபம் காட்ட செல்வம் நீடித்து நிலையான இன்பத்தை தரும்.

பச்சை கற்பூரத்தை சின்னதாக எடுத்து ஒரு பேப்பரில் வைத்து மடித்து பர்ஸில் வைத்துக் கொள்ள பண வரவு சீராக உயர்ந்து பண விரயம் குறையும். செலவானாலும் வரவும் வருவதால் மனநிம்மதி, சந்தோஷம் மேம்படும். தொழில்விருத்தியடைய பணம் வழங்கும் டப்பா, பணப்பெட்டி, லாக்கர் என பச்சை கற்பூரத்தை வைத்திருக்க தொழில் மேன்மை, செல்வ செழிப்பு மேம்படும்.

பூஜையறையில் பச்சை கற்பூரத்தை வைக்கலாம். தெய்வ கடாட்சம் நிறைந்து நேர்மறை எண்ணங்கள் மிகுந்து காணப்படும். பச்சை கற்பூரத்தை எடுத்துக் கொண்டு குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வேண்டிக் கொண்டு ஒரு டப்பாவில் வைத்துவிட நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் நிகழும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com