வெள்ளி தரும் அதிர்ஷ்டம்!

வெள்ளி மோதிரம், மெட்டி, கொலுசு, காப்பு என அணிகலனாக செய்து அணிவது நம் மரபு. அழகுக்கு அழகு சேர்ப்பதோடு ஆரோக்யத்திற்கும் வெள்ளி பயன்படுகிறது. வெள்ளி அணிவது ஆரோக்ய பலன்களை தரும் என்பதோடு சரியான முறையில் பயன்படுத்த வாழ்வில் அதிர்ஷ்டத்தை தரும் என்பது நாம் அறியாதது.
வெள்ளி என்பது வியாழன் மற்றும் சந்திரகிரகத்துடன் தொடர்புடையது. இது நம் உடலில் இருக்கும் நீர் மற்றும் கபத்தின் அளவை சமநிலையில் வைத்திருக்கும். ஒருவருடைய வாழ்வில் பெருமையும், அதிர்ஷ்டத்தையும் வெள்ளி கொண்டுவரும் என்று சொன்னால் அது மிகையல்ல.
உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் வெள்ளி உதவுகிறது. வீட்டில் பல்வேறு வடிவங்களில் வெள்ளியை சமையலறை மற்றும் படுக்கையறையில் வைத்திருக்க நேர்மறையான சக்தியை அது கொடுக்கும். மனதில் அமைதியை ஏற்படுத்தும். சுண்டு விரலில் மோதிரம் அணிந்தால் அதிக ஆற்றல் கிடைக்கும். வெள்ளி மோதிரம் ஆனது சந்திரனின் தாக்கத்தை நம்மீது அதிகரிப்பதோடு சளி, இருமல் மற்றும் மூட்டு வலி பிரச்சனையையும் போக்கும்.

வெள்ளி செயினை அணிவதும் உடலுக்கு குளிர்ச்சி தரும். இதை அணிந்தால் தூக்கப்பிரச்சனை, பேச்சு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தும். வெள்ளி பாத்திரத்தில் தேன் அல்லது பால் குடிப்பது சளி, இருமலுக்கு சிறந்த தீர்வாக அமையும். வெள்ளி தட்டு, டம்ளர் உபயோகித்த நம் முந்தைய தலைமுறையினர் நல்ல ஆரோக்யத்துடன் இளமையாக இருந்ததை பார்த்திருக்கலாம். எனவே நாமும் வெள்ளியைப் பயன்படுத்தி பலன் பெறுவோம்.