இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரே கோயில்... அது எது? எங்கு உள்ளது? தனியே போக வேண்டாம் பக்தர்களே!

Kaladevi Temple
Kaladevi Temple
Published on

மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி எனும் கிராமத்தில் உள்ளது காலதேவி கோவில். கோவிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் ’நேரமே உலகம்.’

புராணங்களில் வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக வணங்குகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகின்றன. காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்கள் இவை அனைத்துக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி இந்த காலதேவிக்கு உண்டு. 

நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான். 

பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாகவும் இவை கருதப்படுகின்றன. 

கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும். கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை. 

காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு போன்ற வேண்டுதல்கள் இல்லாமல், “எனக்கு எது நல்லதோ அதைக் கொடு" என வேண்டினால் போதும்.

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ செல்லமுடியும்.

இதையும் படியுங்கள்:
ஏன் கேரளாவை God's own country என்று சொல்கிறோம் தெரியுமா??
Kaladevi Temple

தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு. ஏன் என்றால் இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது. விழாக்காலத்தில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றன.

வாழ்வில் ஒரு முறையாவது சென்று காலதேவியை வழிபட்டு உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படுவதை உணருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com