ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

அம்மனுக்கு மாவிளக்கு
அம்மனுக்கு மாவிளக்குhttps://tamil.newsbytesapp.com
Published on

பொதுவாக, கோயில்களில் சுவாமிக்கு மாவிளக்கு போடுவது என்பது மிகவும் விசேஷமான ஒரு வழிபாடாகக் கருதப்படுகிறது. மாவிளக்கு போடுவதால் குடும்பத்துக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். அதுவும் ஆடி மாதம் அம்மனுக்கு மாவிளக்கு போடுவது சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். ஆடி வெள்ளிக்கிழமை அன்று வீட்டிலேயோ அல்லது கோயிலிலேயோ அம்மன் சன்னிதியின் முன்பு மாவிளக்கு ஏற்றுவது மிகவும் விசேஷம் ஆகும். இது குடும்பத்துக்கு பல்வேறு விசேஷமான பலன்களைப் பெற்றுத் தரும் என்று அக்காலம் முதற்கொண்டு நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக, மாவிளக்கு ஏற்றுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி மகாலஷ்மி அருள் பரிபூரணமாகக் கிடைத்து செல்வச் செழிப்புடன் சுகபோக வாழ்வு அமையும் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள். மாவிளக்கு ஜோதியாக நின்று ஒளிரும். ஜோதி சொரூபமாக அம்பிகை நம் இல்லங்களில் வந்து அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றப்படுகிறது.

இந்த மாவிளக்கு பச்சரிசி மாவையும் வெல்ல சர்க்கரை, ஏலக்காய் கொண்ட வாசனைப் பொருட்களையும் சேர்த்து சிறிது நெய் விட்டு மாவாகப் பிசைந்து அதை வாழை இலையின் நடுவே விளக்கு போல் அமைக்க வேண்டும். மேலே குழியாக கைவிரல் வைத்து அழுத்திக்கொள்ள வேண்டும். அந்த விளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து அதில் நெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாகத் திரித்துப் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பியர்ஸ் பழத்திலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
அம்மனுக்கு மாவிளக்கு

ஒரு கிலோ பச்சரிசியை தண்ணீர் விட்டு களைந்து ஒரு துணியில் பரப்பி காய வைத்து பிறகு லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போது அந்த அரிசியை வீட்டில் இருக்கும் மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். மாவு அரைக்கும்போது   ஏலக்காயையும் சேர்த்து அரைத்து முக்கால் கிலோ  வெல்லத்தை துருவி அரிசி மாவுடன் கலந்து வைக்க வேண்டும். பின்னர் அதனை நன்றாகப் பிசைந்து உருண்டையாக உருட்ட வேண்டும். அதில் நெய் ஊற்ற ஏதுவாக சிறிய குழி போல் விரலால் அமைத்துக் கொண்டால் மாவிளக்கு தயாராகிவிடும்.

ஆடி வெள்ளிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றுவதால் இல்லத்தில் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும் ஆயுள், ஆரோக்கியத்துடன் தீராத கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com