ஆன்மிகக் கதை: தவளைக்கும் தயை புரிந்த தயாநிதி!

Aanmeega Kathai: Thavalaikkum Thayai Purintha Dhayanithi
Aanmeega Kathai: Thavalaikkum Thayai Purintha Dhayanithihttps://www.facebook.com

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது ஒருசமயம் கண்ணபிரான் அவர்களைப் பார்க்க கானகத்திற்குச் சென்றார். பலமான உபசரிப்புக்கிடையில் பீமன் கண்ணனுக்காக பழங்கள் பறிப்பதற்கு காட்டிற்குச் செல்ல, கிருஷ்ணர் நீராட வெந்நீர் சுட வைத்தாள் பாஞ்சாலி.

கண்ணன் பாண்டவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். வெகு நேரமானது. பாஞ்சாலி தண்ணீர் சுட்டு விட்டதா என தண்ணீரை தொட்டுப் பார்க்க, தண்ணீர் ஜில்லென்று இருந்தது. பாஞ்சாலி இந்த விஷயத்தை தருமரிடம் சொல்ல, மேற்கொண்டு விறகுகள் கொண்டு வந்து நன்றாக தீ மூட்டினர் பாண்டவர்கள்.

அப்படியும் தண்ணீர் சுடுவதாக தெரியவில்லை. இவை அனைத்தையும் கண்ணபிரான் கண்டும் காணாமல் சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் பாஞ்சாலி, தண்ணீர் சூடாகாமல் இருப்பதற்கான காரணத்தை கண்ணபரமாத்மாவிடமே கேட்டாள்.

இதையும் படியுங்கள்:
சருமப் பொலிவைக் காக்கும் சத்தான உணவுகள்!
Aanmeega Kathai: Thavalaikkum Thayai Purintha Dhayanithi

பகவான் தண்ணீர் இருந்த பாத்திரத்தை கீழே கவிழ்த்து விடச் சொன்னார். அவர்களும் அதுபோலவே செய்ய, உள்ளிருந்து ஒரு தவளை துள்ளி குதித்து ஓடியது. அனைவரும் அதை வியப்புடன் பார்க்க, கண்ணன் அவர்களிடம் கூறினார், “பாஞ்சாலி நீ தண்ணீரை சுட வைக்க ஆரம்பித்ததும் அதனுள் இருந்த தவளை என்னை சரண் அடைந்து விட்டது. என்னை சரணடைந்தவர்களைக் காப்பாற்றுவது என் கடமை அல்லவா? அதனால்தான் தண்ணீர் சூடாகவில்லை” என்று பதில் அளித்தார்.

கண்ணபிரானின் கருணையை உணர்ந்து, பாஞ்சாலி உள்ளிட்ட பாண்டவர்கள் அனைவரும் மெய் சிலிர்த்து நின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com