வாஸ்துப்படி படுக்கை அறையில் இதையெல்லம் வைக்கக் கூடாது: ஏன் தெரியுமா?

வாஸ்துப்படி படுக்கை அறையில் இதையெல்லம் வைக்கக் கூடாது: ஏன் தெரியுமா?

ந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஏனென்றால், வீட்டில் வாஸ்து குறைபாடு ஏற்பட்டால் வாழ்க்கையில் எக்கச்சக்கமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. அதனால்தான், வீடு கட்டுவது முதல் அலங்காரம் செய்வது வரை வாஸ்துவுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக, நாம் நிம்மதியாக உறங்குவது படுக்கை அறைதான். வாஸ்து முறைப்படி படுக்கை அறைக்குள் என்னென்ன பொருட்கள் இருக்கலாம், இருக்கக்கூடாது என தெரிந்து கொள்ளலாம்.

செருப்பு: பலரும் வீட்டிற்குள் ஒரு செருப்பு உபயோகப்படுத்துவார்கள். அது நல்லதே என்றாலும் அதை கட்டிலுக்கு அருகிலோ அல்லது படுக்கை அறையிலோ வைக்கக் கூடாது என கூறப்படுகிறது. இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என சொல்லப்படுகிறது.

சார்ஜர் வயர்கள்: தற்போது ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் யாருமே இல்லை. 24 மணி நேரமும் செல்போன்தான். அப்படி செல்போனில் சார்ஜ் தீர்ந்து விட்டால் சார்ஜ் போட்டுகொண்டே உபயோகிப்பார்கள். இப்போது கட்டப்படும் வீடுகளில் படுக்கும் தலைமாட்டில் இருந்து ஒரு அடி இரண்டடி அளவில் சார்ஜ் போடுவதற்கு ப்ளக் வசதி வைக்கப்படுகிறது. ஆனால், அந்த ப்ளக்கில் இரவு நேரத்தில் வயர்கள் தொங்கக் கூடாதாம். இது வீட்டில் உள்ளவர்களின் உறவுகளை பாதிக்கும் என சொல்லப்படுகிறது.

மாத்திரைகள்: முதியவர்கள், குழந்தைகள் என பலரும் ஏதேனும் சிகிச்சை பெற்று வருபவர்களாக இருந்தால் படுக்கை அறையில் மாத்திரை, மருந்துகளை வைத்திருப்பார்கள். சாப்பிட்டு வந்தவுடன் மாத்திரையை போட்டு அப்படியே தூங்குவார்கள். வாஸ்துபடி படுக்கை அறையில் மாத்திரைகளை வைத்தால் நாள்பட்ட கணக்கில் நோய்வாய்படுவார்கள் என கூறப்படுகிறது.

துடைப்பம்: வீடு கூட்டிய பிறகு ஏராளமானோர் படுக்கை அறையில் கூட்டும் மாறை வைத்திருப்பார்கள். ஆனால், வாஸ்துபடி துடைப்பத்தை படுக்கை அறையில் வைத்தால், பண கஷ்டம் வரும் என சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com