அதியற்புத ஆலயங்கள்!

Temple
Temple

1. மடப்புரம் பத்ரகாளி

Madapuram Kali Temple
Madapuram Kali TempleImage Credit: theholidaysdestination

அமைவிடம்: மதுரையிலிருந்து 19 கி.மீ., சிவகங்கையிலிருந்து 30 கி.மீ.

தரிசன நேரம்: காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.

விசேஷம்: பிரதி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இங்கே திருவிழாபோல் கூட்டம் கூடுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படித் திருவிழாபோல் கூட்டம் கூடுவதால் இங்கே தனியாக திருவிழா எடுக்கப்படுவதில்லை.

வேண்டுதல் : காளிக்குப் பின்புறம் பிராகாரத்தில் உள்ள வேப்பமரத்துக்குத் தெய்வ சக்தி இருக்கிறது. நீண்ட நாட்கள் திருமணம் தடைபடும் பெண்கள் இந்த மரத்துக்குத் தாலி கட்டி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தங்களின் முந்தானையைக் கிழித்து வேப்ப மரக்கிளையில் தொட்டில் கட்டிவிட்டால் விரைவில் அவர்களுக்கு குழந்தைப்பேறு நிச்சயம். காளிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும்.

2. பள்ளிகொண்ட சிவபெருமான்

Pallikonda Sivaperuman Temple
Pallikonda Sivaperuman TempleImage Credit: Psy fan

அமைவிடம்: சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சாலையில் சுமார் 56 கி.மீ., ஊத்துக்கோட்டையிலிருந்து சுமார் 2 கி.மீ.,

தரிசன நேரம்: காலை 6 - 12.30. மாலை 4 - 8. பிரதோஷ நாட்களில் முழு நாளும் நடை திறந்திருக்கும்.

விசேஷம்: பிரதோஷ தினங்கள், மஹா சிவராத்திரி, குரு பெயர்ச்சி, சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் சனி பிரதோஷங்களை உத்தம சனி பிரதோஷம் என்றும், அடுத்து தரிசிக்கும் இரண்டு பிரதோஷங்களை அர்த்தநாரி பிரதோஷம் என்றும் வழிபடப்படுகிறது.

வேண்டுதல்: இத்தல இறைவனைத் தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.

3. கரையார் சொரிமுத்து அய்யனார்

Sorimuthu Ayyanar Temple
Sorimuthu Ayyanar TempleImage Credit: Manju Kanakarajan

அமைவிடம்: நெல்லையிலிருந்து அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாக சுமார் 70 கி.மீ. நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உண்டு.

தரிசன நேரம்: காலை 6 மணி அளவிலும் மாலை 5.30 மணி அளவிலும் கோயிலில் பூஜைகள் நடைபெறுகின்றன.

விசேஷம்: ஐயப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால், கார்த்திகை மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் இங்கு மாலை அணிந்து சபரிமலைக்குச் செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்துகின்றனர். மேலும், தை, மாசி மாத அமாவாசை தினங்களும் விசேஷ நாட்களாகும்.

வேண்டுதல்: காரணம் தெரியாத பயம் விலக, செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாக இத்தல அய்யனாரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

4. சிங்கப்பெருமாள்கோயில் பாடலாத்ரி நரசிம்மர்

Lord Narasimhar
Lord Narasimhar

அமைவிடம்: சென்னை, தாம்பரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவு சிங்கப்பெருமாள்கோயில். நடந்து செல்லும் தொலைவில் கோயில்.

தரிசன நேரம்: காலை 7 - 12.00 மாலை 4.30 - 8.30.

விசேஷம்: தமிழ் வருடப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி, நரசிம்மர் ஜயந்தி, வைகாசியில் சுவாதிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் துவங்கி பத்து நாட்கள் பிரமோத்ஸவம், ஆடிப்பூரம், ஆவணி பவித்ரோத்ஸவம், மாசியில் ஐந்து நாட்கள் தெப்போத்ஸவம், பங்குனி உத்திரம் ஆகியவை விசேஷ தினங்கள்.

வேண்டுதல்: திருமணம், குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் சிறந்து விளங்க கோயிலுக்குப் பின்புறம் உள்ள அழிஞ்சல் மரத்துக்கு சந்தனம், குங்குமம் பூசி, நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர். திருவாதிரை, சுவாதி நட்சத்திரக்காரர்கள், ராகு திசை நடப்பவர்கள், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமாளை வழிபட்டால் நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை.

5. கொல்லங்குடி வெட்டையா காளி

Kaliamman Temple
Kaliamman Temple

அமைவிடம்: சிவகங்கையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் 10 கி.மீ.

தரிசன நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை. பௌர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை.

விசேஷம்: பங்குனி பிரம்மோத்ஸவம், ஆடிப்பெருக்கு, ஆடி, தை, வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி, சிவராத்திரி ஆகியவை விசேஷ தினங்கள்.

இதையும் படியுங்கள்:
சனி பகவான் தாக்கத்திலிருந்து விடுபட எளிய வழிகள்!
Temple

வேண்டுதல்: பெண்கள் தங்கள் கணவர் நலம் பெற வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். தங்கள் கணவர் குணம் அடைந்ததும் தங்கள் தாலியை அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

6. மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள்

Vishnu Temple
Vishnu Temple

அமைவிடம்: கோவையிலிருந்து 42 கி.மீ., அன்னூரிலிருந்து 10 கி.மீ. பேருந்து வசதி உண்டு.

தரிசன நேரம்: காலை 6.30 - 12.45 மாலை 3 - 8 மணி வரை.

விசேஷம்: தை மாதத்தில் 10 நாள், மார்கழியில் 11 நாள் பிரம்மோத்ஸவம் இக்கோயிலில் விசேஷம். தவிர, விஜயதசமி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷம்.

வேண்டுதல்: திருப்பதிக்குச் சென்று பெருமாளைத் தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தலத்துக்கு வந்து நிறைவேற்றுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com