Rudraksha
Rudraksha

ருத்ராட்சம் அணிபவரா நீங்கள்? மறந்தும் இதை செய்யாதீர்கள்!

Published on

ருத்ராட்சம் சிவபெருமானின் அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த ருத்ராட்சம் ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் என்ற மரத்தின் விதையாகும். இந்த மரம் மிதமான வெப்பம் உள்ள இடங்களில், உயர்ந்த மலைகள், குளிர்ச்சியான சூழ்நிலையில் வளரக்ககூடிய மரமாகும். இந்த மரங்கள் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் காணப்பட்டாலும், இந்தியாவின் இமய மலையில் இருந்து பெறப்படும் ருத்ராட்சம் ஆன்மீக ரீதியாக சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

உலக உயிர்களின் நன்மைக்காக பல்லாண்டு காலம் தவம் மேற்கொண்ட சிவபெருமான் கண்விழித்த போது அவரின் கண்களில் இருந்து வழிந்தோடிய கண்ணீர் துளிகள் தான் ருத்ராட்சமாக மாறியது என புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு சிவனின் அம்சமாக பார்க்கப்படும் ருத்ராட்சத்தை எவ்வாறு அணிந்துக்கொள்ளலாம்? அணிந்த பிறகு கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறை பழக்கங்கள் பற்றி காண்போம்.

ருத்ராட்சம் யார் அணியலாம்?:

ருத்ராட்சம் ஆண், பெண், சிறியவர்கள், பெரியவர்கள் என்று யார் வேண்டுமானாலும் அணியலாம். ருத்ராட்சம் அணிந்தால் ஒரு சில நடைமுறை பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

ருத்ராட்சம் அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள்:

முதலில் நீங்கள் எந்த வகையான ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். 1 முதல் 14 ருத்ராட்சங்கள் கிடைக்கிறது. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வாெரு நன்மை உண்டு. எனவே சிவனடியார்களின் ஆலோசனை பெற்று ருத்ராட்சத்தை தேர்வு செய்து கொள்ளலாம். ருத்ராட்சம் சிவப்பு நூலில் கோர்த்து அணியலாம். மேலும் தங்கம் மற்றும் வெள்ளி சங்கிலியில் கோர்த்து அணியலாம். ஆனால் கருப்பு நூலில் கோர்த்து அணியக்கூடாது.

முதல் முறையாக ருத்ராட்சம் அணிபவர்கள் திங்கட் கிழமை, பிரதோஷம்  நாட்களில் சிவபெருமானின் பாதத்தில் வைத்து பூஜை செய்து விட்டு, ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை கூறி அணிந்துக்கொண்டால் சிறப்பு. 

ஏதாவது காரணங்களால் ருத்ராட்சத்தை அகற்ற விரும்பினால், சுத்தமான இடத்தில் வைப்பது நல்லது. மீண்டும் அணியும் போது சுத்தான நீரில் கழுவி உலர வைத்த பிறகு அணிந்துக்கொள்ளலாம். இரவு நேரங்களில் உறங்க செல்லும் முன் ருத்ராட்சத்தை கழற்றி வைக்கலாம்.

ருத்ராட்சம் ஏதேனும் சேதமடைந்துவிட்டால், அதை ஆறு, குளங்கள், போன்ற நீர் நிலைகளில் விட வேண்டும். ஒருவர் பயன்படுத்திய ருத்ராட்சத்தை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது.

ஒரு வீட்டில் குழந்தை பிறந்திருந்தாலோ, இறப்பு நிகழ்ந்திருந்தாலோ ருத்ராட்சத்தை கழற்றி வைக்க வேண்டும். மேலும் இது போன்ற  இடங்களுக்கு செல்லும் முன் ருத்ராட்சம் கழற்றி வைப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
வேதங்களுக்கு மரியாதை செய்யும் நன்னாள் ஆவணி அவிட்டம்!
Rudraksha

மதுபானம், புகைப்பிடித்தல், அசைவ உணவுகளை சாப்பிடும் போது ருத்ராட்சம் அணிவதை தவிர்க்கவும். ஏனென்றால் ஆன்மீக ரீதியாக புனிதமாக பார்க்கப்படும் ருத்ராட்சம் நேர்மறையான ஆற்றலை கொடுக்க கூடியது. இது போன்ற பழக்கங்களால் இதன் தன்மையை இழக்க நேரிடும்.

மேலும் ருத்ராட்சத்தை வாயில் வைத்து கடிக்க கூடாது. 108 மணிகள் கொண்ட ருத்ராட்ச மாலையை அணிந்துக்கொள்வதால் பாவங்கள் குறைந்து அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com