உங்களுக்கு வைர நகை மீது ஆசையா? ஜாதகம் என்ன சொல்கிறது தெரியுமா?

Diamond
Benefits of wearing DiamondImage Credits: BBC

வரத்தினக் கற்களிலேயே வைரத்திற்கு என்று தனிச் சிறப்பு உண்டு. வைர நகை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆசை வாழ்க்கையில் எல்லோருக்குமே ஒருமுறையாவது வந்திருக்கும். அதன் ஜொலிக்கும் தன்மை பலரையும் மதிமயக்கக் கூடியதாகும். அத்தகைய வைர நகை அணிவதைப் பற்றி ஜாதகம் என்ன சொல்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

‘வைரம்’ என்ற சொல் கிரேக்க வார்த்தையான அடாமஸியிலிருந்து வந்தது. ‘அடாமஸ்’ என்ற வார்த்தைக்கு அழிக்க முடியாத, வெல்ல முடியாத என்று பொருள். இந்த உலகத்திலேயே இந்தியாவில்தான் வைரம் முதல்முதலாகக் கண்டெடுக்கப்பட்டது. அதுவும் நம் முன்னோர்கள் வைரத்தை 4ம் நூற்றாண்டிலேயே அதிகமாக பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போது உலகத்திலேயே பெரிய வைர சுரங்கம் இருக்கும் நாடு ரஷ்யாவாகும்.

வைரம் சுக்ர கிரகத்துடன் தொடர்புடையதாகும். வைரக்கல் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிகம் பொருந்துகிறது. பெண்கள் வைரக்கல்லை பயன்படுத்தும்போது பெரியதாக தோஷம் வருவதில்லை என்று கூறப்படுகிறது. பொதுவாக, ரிஷபம், துலாம் ராசிக்காராகள் வைரத்தைப் பயன்படுத்தலாம் என்று சொல்வார்கள்.

அதேபோல், தனுசு மற்றும் மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வைரம் நெகட்டிவான பலனை தரும். வைரத்தை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவார்கள். தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என்று எதில் வேண்டுமானாலும் செய்து வைரத்தை அணியலாம். வைரங்கள் வாங்கும்போது அதில் Black spot, damage போன்றவை இல்லாமல் பார்த்து வாங்குவது நல்லது.

வைரம் அணிவது மகிழ்ச்சி, பணம், காதல் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெறுவது, திருமணம், ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
தள்ளிப் போடுவதை தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்!
Diamond

சிலருக்கு வைர மூக்குத்தி அணிந்த பிறகு தலைவலி, கண் வலி போன்றவை வரும். இதற்குக் காரணம் வைரத்தின் ஒளி கண்களில் படுவதாலேயாகும். அதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் வைரத்தை தவிர்ப்பது நல்லது. முன்பெல்லாம் வைரம் வாங்க வேண்டுமெனில் அந்த வைரத்தை வீட்டில் 2 அல்லது 3 நாட்கள் வைத்து பார்த்துவிட்டு, அதனால் நல்ல விஷயங்கள் ஏற்படுகிறதா? அல்லது கெட்டது ஏதேனும் ஏற்படுகிறதா? என்று பார்த்துவிட்டே வாங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரத்தை வாங்கும்போது 1, 3, 9 போன்ற ஒற்றைப்படையில் வாங்குவது நல்லது. 4, 8 போன்ற எண்ணிக்கையில் வாங்குவதை தவிர்க்கவும். புதிதாக வைரம் வாங்கினால் அதை பூஜையறையில் பாலில் ஒருநாள் முழுவதும் போட்டு வைத்து விட்டு பிறகு எடுத்து பயன்படுத்துவது நல்லது.

வைரத்தால் ஒருவரை உயர்ந்த நிலைக்கும் தூக்கி விட முடியும், பாதாளத்தில் தள்ளவும் முடியும். அத்தகைய குணமுடையது வைரம். அதனால் வைரம் வாங்குவதில் எப்போதுமே தனி கவனம் தேவை. தோஷம் இல்லாததாக, நமக்கு ஒத்துக்கொள்கிறதா? என்று பார்த்து வாங்குவது சிறந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com