அரியலூர் உடையார் பாளையம் பயறணிநாதர் கோவில்: திருமணத் தடையை நீக்கும் காண்டீப தீர்த்தம்!

திருமணத் தடைகளை நீக்கி, ராகு தோஷங்களைப் போக்கும் காண்டீப தீர்த்தம் கொண்ட பயறணிநாதர் கோவில்; பாண்டவர்கள் தங்கிய புனித ஸ்தலமாக மகாவிஷ்ணு சிவனை வழிபட்ட தலம்
udayarpalayam-payaraninathar-temple
udayarpalayam-payaraninathar-temple
Updated on

யறணி நாதர் திருக்கோவில் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் உள்ளது.‌ இத்தலத்தின் மூலவர் பயறணிநாதர்.‌ அம்மன் நறுமலர் பூங்குழல் நாயகி, தலமரம் மகிழமரம், தீர்த்தம் காண்டீப தீர்த்தம்.‌ இத்திருக்கோவில் சுமார் 1400ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டது.  இதன் புராணப் பெயர்  முற்கபுரி, பத்ராரண்யம்‌. முற்காலத்தில் சோழ உடையார்கள் என்ற ஜமீன்கள் தங்கள் படைவீரர்களுடன் தங்கியிருந்ததால் உடையார் பாளையம் ஆனது. அரியலூரில் இருந்து 28கி. மீ. தொலைவில் உள்ளது

இதன் தல வரலாறு

பண்டைய காலத்தில் மிளகு வணிகர் ஒருவர்  திவாகர் புரம் என்ற நாட்டில் வாழ்ந்தார்.‌ சோழநாட்டு சந்தையில் மிளகை விற்பதற்காக  மாடுகளின் மீது ஏற்றிக்கொண்டு உடையார் பாளையம் வந்தார்.‌ இக்காலக்கட்டத்தில் வெளியூர்களிலிருந்து சோழ நாட்டில்  வணிகம் செய்ய வருவோர் வணிக பொருட்களுக்கு ஏற்ப  வரி செலுத்த வேண்டும். வரி அதிகமாக இருக்கவே  வியாபாரி தன்னிடம் பயறுதான் உள்ளது என்றார்.‌ தன் பொய்க்கு சாட்சியாக அவ்வூர் இறைவன் பெயரைக் கூறினார்.‌

மகிழ்ந்த வணிகன் வரியைத் கட்டிவிட்டு  சந்தையை அடைந்து பொதி மூட்டைகளைத் திறந்தபோது மிளகுக்குப் பதிலாக பயறு இருப்பது கண்டு அதிர்ந்து போனார்.‌ தன் தவற்றை உணர்ந்தவளாய் இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். அப்போது விட்ட இடத்தில் தேட வேண்டும் என அசரீரி ஒலித்தது‌ உடனே வணிகர் கோவிலை அடைந்து  சிவபெருமானை வேண்ட  பொதி மூட்டைகளில் இருந்த பயறு மிளகாக மாறியது.‌ இந்நிகழ்வுக்குப் பின் இந்த ஈசன் பயறணீஸ்ச்வரர் என்று அழைக்கப்பட்டார்.

சுவாமியின் நாமம் வடமோழியில் முற்கபூரீஸ்வரர் என்று கூறப்படுகிறது. இக்கோவில் பிரம்மாண்டமாக ஏழு நிலைகோபுரத்தைக் கொண்டுள்ள.து இந்த  கோவிலில் வற்றாத குளம் ஒன்று உள்ளது. பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது  முறாகபுரி என்ற இந்த பயறணீஸ்வரத்தில் தங்கினர். தண்ணீர் இன்றி அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். அப்போது அவர்கள் வினாயகரை வேண்டினர்‌ விநாயகர். அர்ச்சுனனின் காண்டீபத்தை வளைத்து அம்பு எய்து குளத்தை உருவாக்கினார்.‌ இக்குளத்தில் நீர் என்றுமே வற்றுவதில்லை.‌ வில்லை வளைத்த பிள்ளையாரை வில் வளைத்த பிள்ளையார் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்.

இக்கோவில் தீர்த்தத்திற்குக் காண்டீப தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது‌. இக்கோவில் திருமணத் தடையை நீக்கக் கூடியது. பிரதோஷ காலத்தில் விளக்கேற்றி வழிபட திருமணம் நடைபெறும்.‌ராகு காலத்தில் துர்க்கைக்கு நெய் தீபம்  ஏற்றி வழிபட ராகு தோஷம் நீங்கி திருமணம் கைகூடும்.

இதையும் படியுங்கள்:
செங்கண்மால் சிவன் கோவில்: மகாவிஷ்ணு சிவனை வழிபட்ட புனித பூமி!
udayarpalayam-payaraninathar-temple

இக்கோவில் பெருமானுக்கு ஆண்டுதோறும் 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.‌ அதன்படி சித்திரையில் திருவோணம், மார்கழியில் திருவாதிரை, ஆனியில் உத்தரம், ஆகிய நட்சத்திரங்களிலும் மாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் சதுர்தசி என வருடத்தில் 6 நாட்கள் அபிஷேகம் நடைபெறுகிறது.

அப்போது 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடக்கிறது.  திருச்சி ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் இருந்து மேற்கே 9கி. மீ. தொலைவில் உள்ளது.‌‌ திருமணத் தடை நீங்க மக்கள் அதிக அளவில் இந்த தலத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது‌.

logo
Kalki Online
kalkionline.com