ஏன் செய்யவேண்டும் தர்ப்பணம்? - சாஸ்திரங்கள் சொல்லும் ஆச்சரியமான உண்மைகள்!

pitru-tarpanam
pitru-tarpanam
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on

பொதுவாக மாதந்தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது வழக்கம். அதைத் தவிர இறந்தவர்களுக்காக அவர்களுடைய திதி அன்று தர்ப்பணம் செய்வது வழக்கம். தர்ப்பணம் செய்வதால் பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நியம். இதைத் தவிர தர்ப்பணம் செய்வதில் இன்னும் ஒரு பெரிய பலன் இருக்கிறது அது என்ன என்று இப்பதிவில் பார்க்கலாம்..

தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள். தர்ப்பணம் செய்யும்போது தண்ணீரையும் எள்ளையும் தெளித்து தர்ப்பயாமி தர்ப்பயாமி என்று சொல்வது வழக்கம். தர்ப்பயாமி என்றால் சந்தோஷமடையுங்கள் என்று பொருள்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீரில் நேர்மறை சொற்களை பிரயோகித்தபோது, நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரே முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப் படுவதை கண்டார். அதேசமயத்தில், எதிர்மறை சொற்களை அந்த நீரில் பயன்படுத்திய போது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததை கண்டார்.

இந்த ஆராய்ச்சிதான் இந்த தர்ப்பணம் செய்வதற்கான அடித்தளமாக அமைகிறதென்றே சொல்லலாம்.

அதாவது, தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று பண்டிதர்கள் கூறுவார்கள். அவ்வாறு நீரை ஊற்றி தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை நினைத்து கொண்டு கூறும்போது, அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றன. நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளி மண்டலத்தில் கலக்கின்றன. அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.

அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.

ஒருவரின் உடல் இறந்தாலும் அவருடைய ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும் போது, நம்முடைய மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்ச்சியானது, அவர்களின் ஆன்மீக எண்ணங்களால் உண்டாகும் அதிர்வுகளின் காரணமாக இருக்கலாம் என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

இதையும் படியுங்கள்:
பொய் சொன்னால் தண்டிக்கும் விநாயகர்! காணிப்பாக்கம் ஆலயத்தின் அதிரடி ரகசியங்கள்!
pitru-tarpanam

ஆகவே, தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்போது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக் கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகிறது என்பதற்கு ஆதாரமாக இந்த இமொட்டோவின் ஆராய்ச்சி வழி வகுக்கின்றது.

சிரார்த்த காரியங்களை செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று இந்து தர்ம சாஸ்திரமும் கூறுகின்றன.

நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக் கொள்கிறது என்கிற காரணத்தினால்தான், அனைத்து சடங்குகளிலும் நீரின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது .

இமோட்டோ அவர்களின் ஆராய்ச்சியை அப்போதே நம்முடைய இந்து. முனிவர்களும் தம்முடைய தவ வலிமையினால் கண்டு கொண்டு நமக்கு கூறி இருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது நமக்கு மெய்சிலிர்த்து போகிறது.

logo
Kalki Online
kalkionline.com