
இந்தியாவை பிரிட்டிஷ் ஆண்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடந்துக் கொண்டிருந்தது.
அப்போது அதில் வேலை செய்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் இஞ்சினியர் ஒரு பிளான் போடுகிறார். அந்த பிளானின் படி ரயில்வே டிரேக் போடும் வழியில் பெருமாள் கோவில் ஒன்று வந்தது. அதை இடிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் இஞ்சினியர் முடிவு செய்தார். ஊர் மக்கள் அதை எதிர்த்து போராடுகிறார்கள். ஆனால், அவர் முடிவில் இருந்து சிறிதும் மாறவில்லை. அடுத்தநாள் வந்து இந்த கோவிலை இடித்துவிட்டு ரயில்வே டிராக்கை இதன் வழியாக போட வேண்டும் என்று நினைக்கிறார்.
அன்று இரவு அந்த பிரிட்டிஷ் இஞ்சினியர் கனவில் பெருமாள் வெள்ளைக் குதிரையில் வந்து சவுக்கை வைத்து இரண்டு அடி அடிக்கிறார். அதில் மிரண்டு போய் ஏழுந்த அந்த பிரிட்டிஷ் இஞ்சினியர் அடுத்த நாளே அந்த பிளானை மாற்றி வேறு வழியில் ரயில்வே டிராக்கை மாற்றி அமைக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அந்த கோவிலுக்கு வெள்ளை குதிரையை மரத்தால் செய்து காணிக்கையாகவும் கொடுக்கிறார். அந்த பெருமாள் வேறு யாரும் இல்லை கோயம்புத்தூர் அருகில் உள்ள காரமடை ரங்கநாத பெருமாள் தான். இன்றைக்கும் அந்த வெள்ளைக் குதிரையில் தான் உற்சவ மூர்த்தி வலம் வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் மதுரை திருமலைநாயக்கர் ஒருமுறை ‘ராஜபிளவை’ என்கிற நோயால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது காரமடை ரங்கநாதர் கோவிலில் ஸ்தல விருட்சமாக இருக்கும் காரை மரத்தில் இருக்கும் இலைகளை அரைத்து பூசியதும் அந்த நோய் குணமானது.
அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த கோவிலில் நிறைய மண்டபங்களை கட்டியதோடு காரைமடை ரங்கநாதருக்கு தேரையும் பரிசாக அளித்தார் திருமலைநாயக்கர்.
ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த இக்கோவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்ற ஊரில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டுப்பகுதியில் உள்ள வைணவ ஸ்தலங்களில் இக்கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும். இத்தகைய தனித்துவம் வாய்ந்த கோவிலை நேரில் சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.