சபரிமலையில் ஆகஸ்ட் 10 நிறை புத்தரிசி பூஜை!

சபரிமலையில் ஆகஸ்ட் 10 நிறை புத்தரிசி பூஜை!

பரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நிறை புத்தரிசி விழா நடைபெறுகிறது. விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும் வேண்டி நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி அதிகாலை 5:45 முதல் 6 15 மணிக்குள் முதல் போக சாகுபடியில் விளைந்து அறுவடை செய்த நெற்கதிர்களை சபரி மலை ஐயப்பன் கோவில் கருவறைக்குள் எடுத்துச் சென்று வழிபட்ட பின் சபரிமலை தந்திரி கண்டறாரு அவரது மகன் பிரம்மதத்தன் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி முதலியார் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்.

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பூங்காவனத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் நிறைப்புத்தரிசிக்கு வைக்கப்படுகின்றன. நிறைப்புத்தரிசி பூஜைக்காக கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அச்சன் கோவிலில் இருந்தும் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் இருந்தும் நெற்கதிர்கள் சேகரித்து ஆண்டுதோறும் திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எடுத்துச் செல்வார்கள். இந்த நெற்கதிர்கள் வீடுகளில் வைத்திருந்தால் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது நம்பிக்கை நிறைப்புத்தரிசிக்காக ஆகஸ்டு 9ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாள் ஆகஸ்ட் 10ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 21 வரை நடை திறக்கப்படும். திருவோணம் திருவிழாவுக்காக ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ஆகஸ்ட் மாதம் மட்டும் மூன்று முறை கோவில் நடை திறந்து மூடப்படுகிறது சபரிமலையில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com