நந்தி மீது ஏறி சிவனை வழிபட்ட நல்ல பாம்பு.!

Snake
SnakeIntel
Published on

திருப்பத்தூர் அருகே நந்தியம் பெருமான் மீது ஏறி சிவனை வழிபட்ட நல்ல பாம்பின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு அவ்வப்போது பல கோயில்களில் சிவலிங்கம் மீது சுழன்று அமர்ந்திருப்பதை பலரும் பார்த்திருப்போம். அப்படி 5 அடி நல்ல பாம்பு ஒன்று எட்டி எட்டி சிவனை வழிபட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை கிராமத்தில் உள்ள சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில்தான் இந்த அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. மூலவர் சன்னிதிக்கு வெளியே இருந்த நந்தி மீது ஏறிய 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று, சிவபெருமானை பார்த்து தரிசிப்பது போல் படம் எடுத்து ஆடியது. இதனை கண்ட கோயில் பூசாரி, சிவனுக்கு தீபாராதனை காட்டிய உடன், நந்திக்கும் அதன் மீது இருந்த நாகத்துக்கும் தீபாராதனை காண்பித்து வழிபட்டார்.

சிவன் கோயிலில் நடந்த இந்த அரிய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர். பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நாகத்தையும், சிவனையும் வணங்கினர். படமெடுத்து ஆடிய பாம்பை சிலர் செல்போன்களில் படமெடுத்தனர். ஆனால் அந்த பாம்பு பக்தர்களை எந்த விதத்திலும் தாக்காமல் சிவனை வழிபட்டு தானாகவே சென்று விட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com