சோதனைகளைத் தீர்க்கும் ஆடி மாத தேவசயினி ஏகாதசி!

சோதனைகளைத் தீர்க்கும் ஆடி மாத தேவசயினி ஏகாதசி!
Published on

டி மாதத்தில் அம்மனின் அருள் பரிபூரணமாக விளங்கும் என்பது ஐதீகம். இந்த மாதத்தில் வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்களை முழுமையாக நிறைவேற்றி குறைகளைத் தீர்த்து வைக்கிறாள் அம்பிகை. ஆடி மாதத்தில் அம்பிகை மட்டுமின்றி, மகாவிஷ்ணுவும் வழிபடும் தமது பக்தர்களின் பிரார்த்தனைகளை செவிமடுத்து, விருப்பங்களை நிறைவேற்றித் தருகிறார். அம்மனுக்கு மிக உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கும் மிக உகந்த நாளாக சுக்ல பட்ச துவாதசி தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நாளை சுக்ல பட்ச துவாதசி தினமாகும். இந்த தினத்தில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால், நினைத்ததெல்லாம் நிறைவேறும்; தொட்டதெல்லாம் துலங்கும்.

சுக்ல பட்ச துவாதசி திதியில் அதிகாலை நீராடி, வீட்டில் விளக்கேற்றுங்கள். பூஜை அறையில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டு, துளசி மாலை சாத்துங்கள். பூஜையின்போது விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிக நல்லது. இயலாதவர்கள், விஷ்ணு சகஸ்ர நாமத்தை வீட்டில் ஒலிக்கவிட்டு பெருமாளை வழிபடலாம். இன்று பெருமாளை துளசி கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு. பூஜையில் ஸ்வாமிக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யலாம்.

ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை ஏகாதசி திதி, ‘தேவசயினி ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினத்தன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதம் என பிரித்துக் கொண்டு மகாவிஷ்ணுவுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பு. ஏகாதசி தினத்தில் அன்னதானம் செய்வது மகத்தான பலன்களைப் பெற்றுத் தரும். இதனால் உங்கள் வேண்டுதல்களை நிவர்த்தி செய்து அருளுவார் வேங்கடாசலபதி கடவுள்.

ஏகாதசி திதியில் மகாவிஷ்ணு வழிபாட்டுக்குப் பின்னர், குறைந்தது ஐந்து பேருக்காவது உணவு வழங்குங்கள். இதனால் வீட்டில் தனம், தானியம் பெருகும். வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். கடன் தொல்லைகளில் இருந்து மீளலாம். நல்ல உத்தியோகம் கிடைக்கும். ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி, துவாதசி என்றில்லாமல் பொதுவாக, மாதந்தோறும் வரும் ஏகாதசி, துவாதசியில் பெருமாள் வழிபாடு செய்வதும், ஏகாதசி நாளில் உணவு தானம் வழங்குவதும் அனைத்துப் பாபத்தையும் போக்கி, புண்ணியப் பலனை பெருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com