ஆன்மிகக் கதை: ‘தர்மம் தலை காக்கும்’ எப்படித் தெரியுமா?

'Dharmam Thalai Kakkum| Eppadi Theriyumaa?
'Dharmam Thalai Kakkum| Eppadi Theriyumaa?https://www.vikatakavi.in
Published on

ரு கிராமத்தில் இரக்க குணம் கொண்ட பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தனது வீட்டுச் சுவர் மீது, ‘யாராவது பசியோடு வந்தால் சாப்பிடட்டும்’ என்று இரண்டு இட்லிகளை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி நினைத்தபடியே தினமும் அந்த வழியே வரும் கூன் விழுந்த முதியவர் ஒருவர் அந்த இட்லிகளை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அந்த முதியவர் இட்லிகளை எடுத்துச் செல்லும்போது, தினமும் எதையோ முனகியபடியே சொல்லிக்கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் இட்லி வைக்கும் அந்தப் பெண்மணிக்கு அந்த முதியவர் என்ன முனகுகிறார் என்பதை கேட்க வேண்டும் என்று தோன்றியது. அதன்படி அன்று சுவர் அருகே மறைந்து நின்று முதியவர் என்ன முனகுகிறார் என்பதைக் கேட்டாள்.

‘நீ செஞ்ச பாவம் உன்கிட்டயே இருக்கும்… நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்’ என்பதுதான் அந்த முதியவரின் தினசரி முனகல் வார்த்தைகள். இதைக் கேட்ட அந்தப் பெண்மணிக்கு அந்த முதியவர் மீது கோபம். காரணம், ‘தினமும் இட்லி வைக்கும் மவராசி நல்லா இருக்கணும்’ என அந்த முதியவர் கூறுவார் என்று அப்பெண்மணி நினைத்திருந்தாள்.

அந்த முதியவரின் மீது பயங்கர கோபத்தில் இருந்த அந்தப் பெண்மணி மறுநாள் தான் வைத்த இட்லியில் கொஞ்சம் விஷத்தையும் சேர்த்து வைத்து அந்த முதியவர் சாகட்டும் என்று நினைத்தாள். சற்று நேரத்தில் மனம் மாறி, ‘இதற்காக ஒரு உயிரை கொல்ல வேண்டுமா’ என நினைத்து, அந்த விஷ இட்லியை எடுத்து சாக்கடையில் எறிந்துவிட்டு, வழக்கமாக வைக்கும் நல்ல இட்லியை வைத்துவிட்டுச் சென்றாள். வழக்கம்போல், முதியவரும் அந்த இட்லிகளை எடுத்துக்கொண்டு தான் தினமும் கூறும் வாசகத்தை சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

அன்று மதியம் அந்தப் பெண்மணியின் வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு அவள் வந்து கதவைத் திறந்தாள். அங்கு அன்று காலை வேலை தேடிச் சென்ற தனது மகன் கசங்கிய உடையோடு மிகவும் அழுக்கான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.

அன்று மதியம் அவள் வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள். அங்கு ஒருவன் கசங்கிய உடையோடு நின்றிருந்தான். அதைக் கண்ட அந்தப் பெண்மணி அவனிடம், ‘என்ன இது கோலம்’ என்று கேட்டாள். அதற்கு அவன், ‘அம்மா நான் வேலை தேடிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும்போது எனது பர்ஸ் காணாமல் போய்விட்டது. பசியால் மிகவும் கஷ்டப்பட்டேன். எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை.

இதையும் படியுங்கள்:
முதுமையை தள்ளிப்போட உதவும் உப்பு எது தெரியுமா?
'Dharmam Thalai Kakkum| Eppadi Theriyumaa?

வீட்டுக்கு வர மணிக்கணக்கில் நடந்து வந்ததில் உடல் சோர்வுற்று வழியில் மயங்கி விழுந்துவிட்டேன். நான் கண் விழித்தபோது, ஒரு கூன் போட்ட முதியவர் தான் வைத்திருந்த இரண்டு இட்லியை எனக்குக் கொடுத்து எனது பசியைப் போக்கினார். அந்த இட்லியை சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது” என்றான்.

இதைக் கேட்ட அந்தப் பெண்ணுக்கு நடந்தது என்ன உணர்ந்து தூக்கி வாரிப்போட்டது. ‘விஷம் வைத்த இட்லியை அந்த முதியவர் எடுத்துச் சென்று இருந்தால் இந்நேரம் எனது மகனை அல்லவா நான் இழந்திருப்பேன்’ என பதைபதைத்தாள்.

அந்த முதியவர் சொன்ன வார்த்தைக்கு இப்போதுதான் அந்தப் பெண்ணுக்கு அர்த்தம் புரிந்தது. நாம் செய்யும் தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும் என்பதை அந்தப் பெண் உணர்ந்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com