நவகுஞ்சரம் பற்றி தெரியுமா?

Navaguncharam
Navaguncharamhttps://commons.wikimedia.org

காபாரதம் என்னும் மிகப்பெரிய இதிகாசத்தில் ஓரிடத்தில் நவகுஞ்சரம் என்னும் விசித்திரமான பறவை குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஒடிய மொழி கவிஞரான சரளதாசர் என்பவர் எழுதிய மகாபாரதக் கதையில்தான் இந்த நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

‘நவ’ என்பது ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும். நவகுஞ்சரம் என்பது வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் இணைந்த ஒரு அபூர்வ உயிரினத்தை குறிப்பதாகும். சேவலின்  தலை, மயில் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை புலி மற்றும் மானின் கால்கள், மனிதனுடைய கை ஆகியவை இணைந்த உயிரினமே நவகுஞ்சரம்.

ஒரு சமயம் காட்டுக்குச் சென்ற அர்ஜுனன், அங்கு மலை மீது அமர்ந்து கடுமையான தவம் புரிந்தான். அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் நவகுஞ்சர உருவம் கொண்டு அர்ஜுனனின் முன்பாக வந்து நின்றார். ஏதோ ஒரு அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த அர்ஜுனன், தனது அருகில் இருந்த வில்லை எடுத்து அதில் அம்பை பொருத்திய பின்னர் தனது கண்களைத் திறந்து பார்த்தான். அப்போது தம் எதிரில் நின்ற அதிசய உயிரினத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதலுக்கான காரணங்களும் தீர்வுகளும்!
Navaguncharam

அந்த உயிரினத்தின் மனித கையில் ஒரு தாமரைப்பூ இருந்தது. அதைப் பார்த்த அர்ஜுனனுக்கு ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. ஆனால், உலகமோ எல்லையற்றது என்ற அந்த வார்த்தையின் உண்மையை அர்ஜுனன் உணர்ந்தான்.

ஆம், இந்த உலகத்தில் நாம் காண்பது மட்டும்தான் இருப்பதாக எவரும் நினைக்கக் கூடாது. இதுவரை பார்த்திராத ஓர் உயிரினம்  இன்னும் கூட இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்று அர்ஜுனன் புரிந்து கொண்டான். தன்னை சோதிப்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணரே இந்த உருவத்தில் வந்ததாக உணர்ந்த அர்ஜுனன், தனது கையில் இருந்த வில்லை கீழே போட்டுவிட்டு நவகுஞ்சரத்தை வணங்கினான் என்கிறது அந்த மகாபாரத கதை. ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய ஓவிய பாணியான, ‘படா சித்ரா’ ஓவியத்தில் நவகுஞ்சரம் பல வகைகளிலும் வரையப்படுகிறது. பூரி ஜெகநாதர் கோயிலின் வடக்கே நவகுஞ்சரத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com