தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருக்கும் இந்தப் பஞ்சபூதத் தலங்களைத் தெரியுமா?
சங்கரன் கோயில்- மண்
தாருகாபுரம் -நீர்
கரிவலம் வந்த நல்லூர் - நெருப்பு
தேவதானம் - வானம்
தென்மலை – காற்று.
இவை அனைத்துமே சிவன் வீற்றிருக்கும் கோயில்கள் ஆகும்.
இறைவன் பெயர்: சங்கரலிங்கர்.
இறைவி பெயர்: கோமதி அம்பாள்.
உயிர்கள் தோன்றுவதும் மறைவதும் மண்ணில்தான். சிவன் வேறு, நாராயணன் வேறு வேறு அல்ல. இருவருமே ஒருவரே என்பதை தேவிக்கு உணர்த்த மேற்கொண்ட வடிவமே சங்கரநாராயணர் வடிவமாகும். இங்கு சிவன் பாதியாவும் திருமால் பாதி உடம்பும் காட்சி அளிக்கின்றனர். இந்தக் கோயிலில் ஒரு நாள் தங்கினால் மோட்சமடைவர் என்றும் முற்பிறப்பு பாவம் நீங்கும் என்றும் மூன்று நாட்கள் தங்கினால் மறுபிறவி பாவங்கள் நீங்கும் என்றும் நம்பிக்கை.
இறைவன் பெயர்: மத்தியஸ்த நாதர்.
இறைவி: அகிலாண்ட ஈஸ்வரி.
நீர்த்தத்துவத்தை உணர்த்தும் திருக்கோயில். வாசுதேவநல்லூர் என்னும் ஊருக்கு தென்கிழக்கு சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தின் அடியில் நீர் ஊற்று இருந்ததாகவும் அதனைக்கொண்டே இறைவனை திருமஞ்சன நீராட்டம் செய்தனர் என்றும் கூறப்படுகிறது.
இறைவன் பெயர்: பால்வண்ண நாதர்.
இறைவி பெயர்: ஒப்பணையம்மாள்.
தென்பாண்டி நாட்டில் இந்நகரை ஆண்டுவந்த வர துங்கபாண்டியன் என்பவன், தனக்கு புத்திரப் பாக்கியம் இல்லாமை கண்டு மிகவும் மனம் வருந்தினான். அப்பொழுது இறைவன் அவன் கனவில் தோன்றி, மனக்கவலை நீக்கும்படியும், அந்திமக் காலத்தில் அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தாமே செய்து முக்தி தருவதாகவும் கூறினார். அதன்படியே அவனுடைய அந்திமக் காலத்தில் பால்வண்ண நாதர் வயோதிக பிரம்மச்சாரி வேடத்தில் தோன்றி ஈமக்கிரியைச் செய்துமுடித்தார். மூன்று நாள் காரியமும் செய்துமுடித்து கோயில் உள்ள கர்ப்பகிரகத்திற்குச் சென்று சிவலிங்கத்துடன் கலந்தார்.
இறைவன் பெயர்: நச்சாலை தவிர்த்தவர்.
இறைவி பெயர்: தவம் பெற்ற நாயகி.
இங்குள்ள சுவாமியை வேண்டி அம்பாள் தவம் புரிந்த இடம். ஐம்பூதக் கோயில்களில் இங்கு மட்டுமே கொடி மரத்தின் கீழ் பெரிய ஆமை வடிவம் உள்ளது. சிவலிங்கம் மிகச் சிறியதாக அமைந்துள்ளது.
இறைவன் பெயர்: திரிபுரநாதர்
இறைவி பெயர்: சிவ பரிபூரணி.
இத்தலம் வாயு தலமாகும். கரிவலம் வந்த நல்லூருக்கு வடக்கில் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தக் கோயில் மட்டும் கிழக்குக்கு மாறாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு அம்மன் சன்னிதி வாயில்தான் பிரதான வாயிலாக உள்ளது. முதலில் திரிபுரநாதனை வணங்கி பின்னர் அம்பாளை வணங்கச் செல்ல வேண்டும்.