ஒரு மண்டலம் (48 நாட்கள்) கணக்கு தெரியுமா உங்களுக்கு?

Do you know one zone (48 days) account?
Do you know one zone (48 days) account?

றிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதேநேரத்தில் சூரிய ஒளியின் மூலம்தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா? அதேபோல்தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும். அவை இருக்கும் தொலைவின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி, சூரியனின் ஒளியைப் போல் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்.

நாம் தினசரி பயன்படுத்தும் காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா? அதுபோல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களைக் கொண்டே நாம் அறியலாம்.

ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்துக்கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவற்றின் கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும். எப்படி என்கிறீர்களா?

இதோ இப்படி…

கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள் 9+12+27=48. எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விஷயங்களும் செய்ய முடியாதோ, அதேபோல் இந்த மூன்று கூட்டமைப்புகளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்குக் காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை. எனவேதான், தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
பார்வதி தேவி மகிஷாசுரமர்த்தினி எனப் பெயர் பெற்றது எப்படி தெரியுமா?
Do you know one zone (48 days) account?

இதனால்தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படிச் செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதேபோல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் (மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத) கை கூடுகின்றன.

நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாளர்கள். இன்னும் சந்தேகமாக இருந்தால், ஏதாவது ஒரு செயலையோ அல்லது வேண்டுதலையோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்துதான் பாருங்களேன்! இந்த யோக அறிவியல் உண்மை உங்களுக்கே விளங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com