சிவராத்திரியில் மட்டும் பூக்கும் குங்கிலிய மலரைத் தெரியுமா?

சிவராத்திரியில் மட்டும் பூக்கும் குங்கிலிய மலரைத் தெரியுமா?
Published on

சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது குங்கிலிய மலர் ஆகும். இது ஈசனுக்கு மிக உகந்த சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியம். மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம். இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.

ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன. சிவராத்திரி நாட்களில் மட்டும் இவை பூப்பதால் தெய்வீகத் தன்மை கொண்டவையாக விளங்கும் இந்தப் பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனுக்கு உகந்த மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் கூட இவற்றை வெட்டுவதில்லை.

கன்னடத்தில் குங்கிலிய மரத்தை, ‘தளி’ என அழைப்பர். இந்தப் பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது. இதன் அருகிலுள்ள தேர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின்போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இந்தப் பூ மிகவும் அபூர்வ நறுமணம் கொண்டவை. இந்த மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தொலைவு சுற்றளவுக்கு இந்த மலரின் நறுமணம் வீசும். சிவராத்திரியில் மட்டும் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகள் பெரும் அளவில் தேர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com