திருப்பதி லட்டு உருவான கதை தெரியுமா?

Do you know the story of Tirupati Laddu?
Do you know the story of Tirupati Laddu?Image Credits: Oneindia
Published on

‘லட்டு’ என்று சொன்னாலே முதலில் நினைவிற்கு வருவது திருமலை திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள்தான். திருப்பதி பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதமான ஸ்ரீவாரி லட்டுவிற்கு இணையான சுவையுள்ள லட்டுவை வேறு எங்குமே சுவைக்க முடியாது. அத்தகைய பெருமையைக் கொண்ட திருப்பதி லட்டு உருவானக் கதையைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

திருப்பதி லட்டு அதன் தனித்துவமான சுவைக்கும், அமைப்பிற்கும் பெயர் போனதாகும். ஆகஸ்ட் 2ம் தேதி 1715ல் இருந்துதான் திருப்பதி பாலாஜிக்கு இந்த லட்டு நெய்வைத்தியமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. 1803ம் ஆண்டிலிருந்துதான் பொது மக்களுக்கு இந்த லட்டுவை விநியோகம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். 'கல்யாணம் ஐயங்கார்' என்பவர்தான் பிரபலமான இந்த திருப்பதி லட்டுவை உருவாக்கியவர் என்று சொல்லப்படுகிறது.

திருப்பதி லட்டு மூன்று வகைப்படும். அவை ஆஸ்தான லட்டு, கல்யாண உத்ஸவ லட்டு, புரோக்தம் லட்டு ஆகியனவாகும். ஆஸ்தான லட்டு குங்குமப்பூ, முந்திரி, பாதாம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. இதனுடைய எடை 750 கிராம் ஆகும். முதன்மையான விழா நாட்களில் மட்டுமே இந்த லட்டு தயாரிக்கப்படும்.

கல்யாண உத்ஸவ லட்டுவினுடைய எடையும் 750 கிராம் ஆகும். கல்யாண உத்ஸவ சேவை திருப்பதி பாலாஜி மற்றும் தாயாருக்கு நடைபெறும்பொழுது அதில் கலந்துக்கொள்ளும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் லட்டு ஆகும். புரோக்தம் லட்டு சராசரி திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படுவது ஆகும். இந்த லட்டுவை அதிக அளவில் தயாரிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி லட்டு 2008ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது.

திருப்பதி லட்டு மாவு, எண்ணெய், சர்க்கரை, நெய், டிரை ப்ரூட்ஸ், ஏலக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சரியான முறையில் சேமித்து வைத்தால், இந்த லட்டுக்கள் 15 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மத்தூர் வடை உருவான கதை தெரியுமா?
Do you know the story of Tirupati Laddu?

திருப்பதி பாலாஜியை தரிசித்த பிறகு ஸ்ரீவாரி லட்டுவை பிரசாதமாக எண்ணி உண்ணும் பக்தர்கள் தாங்கள் மலையேறி வந்த கஷ்டங்களையெல்லாம் மறந்து மனநிறைவுடன் வீடு திரும்புவார்கள் என்று நம்பப்படுகிறது. அது மட்டுமில்லாமல் திருப்பதியில் லட்டு மட்டுமே பிரசாதமாக வழங்கப்படுவதில்லை. தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், கேசரி, முருக்கு, வடை, பாயசம், புளியோதரை, தோசை ஆகியவற்றையும் பிரசாதமாக வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com