பூரி ஜெகநாதர் கோயில் ஆச்சரியங்கள் தெரியுமா?

Do you know the wonders of Puri Jagannath Temple?
Do you know the wonders of Puri Jagannath Temple?https://www.linkedin.com
Published on

பூரியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோயில் இந்தியாவின் மதிப்புமிக்க கோயில்களுள் ஒன்றாகும். வருடா வருடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகிருஷ்ணரே ஜெகநாதராக இக்கோயிலில் அருள்புரிகிறார். இந்தக் கோயில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரியில் உள்ளது. இக்கோயிலில் ஜெகநாதர் அவர் சகோதரர் பலராமர் மற்றும் சகோதரி சுபத்திரையுடன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இக்கோயிலில் பல அதிசய நிகழ்வுகள் நடப்பதாகவும் அதற்கு இன்று வரை எந்த விஞ்ஞான விளக்கமும் சொல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஜெகநாதர் கோயில் கோபுரத்தில் உள்ள கொடி காற்று வீசும் திசைக்கு எதிராக பறக்கிறது என்று கூறுகிறார்கள். பாரம்பரிய முறைப்படி இக்கோயிலின் உச்சிக்கு தினமும் பூசாரி ஏறி அக்கொடியை மாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சடங்கை செய்ய ஒரு நாள் தவறினாலும், கோயிலை 18 வருடங்கள் பூட்ட வேண்டிவரும் என்று கூறுகிறார்கள். இக்கோயில்  45 அடுக்குகளைக் கொண்டது. எனினும் எந்த பாதுகாப்புமின்றி வெறும் கையால் இச்சடங்கை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாபகலேபிரா என்பது ஒடிசாவில் நடக்கும் ஒரு புகழ்பெற்ற திருவிழாவாகும். இத்திருவிழாவில் ஜெகநாதர் கோயிலில் இருக்கும் மர சிலைகளை மாற்றி விட்டு, புது சிலைகளை நிறுவுவார்கள். இச்சடங்கு 8, 12, 19 வருடங்கள் என்ற கணக்கில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஜெகநாதரின் முடிவும் பிறகு வரும் புதிய தொடக்கமாகவும் கருதப்படுகிறது. பழைய சிலையை கோயிலின் வளாகத்தில் உள்ள கொல்லி வைக்குண்டத்தில் புதைத்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2015ல் நாபகலேபரா நடைபெற்றது என்றும் அதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த நேரமாக இருந்தாலும் சரி, சூரியன் எந்த பக்கம் இருந்தாலும் சரி கோபுரத்தின் நிழல் கீழே தரையில் விழாது என்று சொல்லப்படுகிறது. இது ஒரு அதிசய நிகழ்வாக கருதப்படுகிறது.

ஜெகநாதருக்கு மஹாபிரசாதம் 5 வேளைகளாக பிரித்து வழங்கப்படும். அதில் 56 உணவு வகைகள் இருக்கும். அதை சுக்கிலா மற்றும் சன்குதி என்று கூறுவார்கள். சுக்கிலாவில் தின்பண்ட வகைகளும், சன்குதியில் மிருதுவான உணவுகளான பருப்பு, அரிசி போன்ற உணவு வகைகளும் இருக்கும். இவை அனைத்தும் கோயிலின் வளாகத்தில் உள்ள ஆனந்த் பஸாரிலே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூரி ஜெகநாதர் கோயில்
பூரி ஜெகநாதர் கோயில்https://odishabytes.com

மஹாபிரசாதம் தயாரிக்க ஆயிரம் பூசாரிகள் இருப்பார்கள். இதற்கு ஏழு பெரிய மண் பாத்திரங்கள் பயன்படுத்தப்படும். ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி உணவுகளை சமைக்கும்போது மேலே முதலில் வைக்கப்பட்டிருக்கும் உணவே முதலில் வேகுமாம். இதுவும் இன்று வரை இக்கோயிலில் நிகழும் அதிசயமாகும்.

கடற்கரையில் உள்ள இக்கோயிலுக்குள் நுழைந்த பிறகு கடல் அலையின் ஓசை கேட்காதாம். அதற்குக் காரணம் ஒரு சமயம் சுபத்திரை இக்கோயிலில் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொண்டாராம். அவரது வேண்டுதலை ஏற்று இக்கோயிலில் அலை சத்தம் கேட்பதில்லையாம்.

வானத்தில் பறவைகள் பறப்பது ஒரு சாதாரண நிகழ்வேயாகும். ஆனால், ஜெகநாதர் கோயில் கோபுரத்திற்கு மேல் கழுகு வட்டமிடுவதோ அல்லது பறவைகளையோ காண முடியாது என்று கூறப்படுகிறது. இதுவும் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

பூரி ஜெகநாதர் கோயில் கோபுரத்தில் உள்ள நீல் சக்கரத்தை பூரியின் எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் அது நம்மை நோக்கியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படியுங்கள்:
அன்றாட மருத்துவத்தில் பனங்கற்கண்டின் பயன்கள்!
Do you know the wonders of Puri Jagannath Temple?

லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருவதுண்டு. அதிலும் ரத யாத்ரா போன்ற விசேஷ நாட்களில் நிறைய பக்தர்கள் வருவதுண்டு. இருப்பினும் செய்த பிரசாதம் மிச்சமாவதும் இல்லை, யாரும் பசியுடன் திரும்பிச் செல்வதுமில்லை என்று கூறப்படுகிறது.

பொதுவாக, கடல் பகுதியில் காலையில் காற்று கடலிலிருந்து கரைப்பக்கமாக வீசும். சாயங்காலம் கரைப்பகுதியிலிருந்து கடல்பகுதிக்கு வீசும். ஆனால் பூரியில் இது அப்படியே தலைகீழாக நடக்குமாம்.

இத்தகைய அதிசயங்கள் நிறைந்த கோயிலுக்கு ஒருமுறையேனும் சென்று தரிசித்து விட்டு வருவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com