மனித முகத்துடன் கூடிய விநாயகர் கோயில் எங்குள்ளது தெரியுமா?

Do you know where is the Ganesha temple with human face?
Do you know where is the Ganesha temple with human face?https://www.newsbharati.com

விநாயகர் என்றதும் நம் நினைவுக்கு வருவது யானை முகமும், உடைந்த தந்தமும், பெரிய காதும்தான். ஆனால், விநாயகரின் உண்மையான மனித முகம் கொண்ட கோயில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே செதலபதியில் உள்ள முக்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. இக்கோயிலில் பிள்ளையார் மனித முகத்துடன் காட்சி தருவது விசேஷம்.

இந்தக் கோயில் 7ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இது மிகவும் பழைமையான கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை நரமுக விநாயகர் என்று பக்தர்கள் அழைப்பர். இந்த விநாயகப்பெருமான் திருச்சிலை கருங்கல்லால் ஆனது. ஒரு கையில் இவர் கோடரியுடன் காட்சி தருவதன் நோக்கம், எல்லா தடைகளும் அழிப்பதற்கு என்று பொருள். இன்னொரு கையில் மோதகம் வைத்திருப்பதற்கான பொருள், வாழ்வில் கிடைக்கும் மகிழ்ச்சியை குறிப்பதாகும். இந்தச் சிலையில் கயிறு வடிக்கப்பட்டுள்ளதன் காரணம், வாழ்வில் கிடைக்கும் நம்பிக்கையை குறிக்கிறது.

ஒருசமயம் பார்வதி தேவி களி மண்ணையும் நெய்யையும் சேர்த்து விநாயகரை உருவாக்கினார். இது சிவபெருமானுக்கு தெரியாது. ஏனெனில் அச்சமயம் அவர் கயிலாயத்தில் தவத்திலிருந்தார். தவத்தை முடித்துக் கொண்டு பார்வதியை காண வந்த சிவபெருமானை விநாயகர் தடுத்தார். அச்சமயம் பார்வதி தேவி நீராடச் சென்றிருந்தார். இதனால் சிவபெருமானுக்கும் விநாயகருக்கும் மோதல் ஏற்பட்டது.

கோபத்தில் சிவபெருமான், விநாயகரின் தலையை துண்டித்துவிட்டார். பிறகு அங்கே வந்த பார்வதி தேவி, சிவனிடம் அவர் செய்த பிழையை எடுத்துரைக்கிறார். இதனால் மனம் வருந்திய ஈசன், விநாயகருக்கு யானை முகத்தை வழங்கினார் என்பது புராணம்.

சிவபெருமான் விநாயகரின் தலையை துண்டித்தபோது அது உத்திரகாண்டில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி விநாயகரின் தலை விழுந்த இடம், பாதாள புவனேஸ்வர் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. அந்தக் குகையினை ஆதிசங்கரரே கண்டுபிடித்தார் என்றும் நம்பப்படுகிறது. அதனால் அங்கேயிருக்கும் விநாயகரை, ‘ஆதிகணேசன்’ என்றே அழைக்கின்றனர். இன்றும் அந்த குகையில் விநாயகரின் தலையை சிவபெருமான் பாதுகாப்பதாகக் கருதப்படுகிறது. விநாயகருக்கு யானை முகம் தந்து அவரை உயிர்பித்த பிறகு எல்லா கடவுள்களும் அவருக்கு ஆசிர்வாதமும் வரமும் கொடுத்தனர். அதனால் விநாயகர் அனைவரது வாழ்விலும் உள்ள தடைகளை நீக்கக்கூடிய என்று அழைக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியை பறிக்கும் தேவையில்லாத பத்து பழக்க வழக்கங்கள்!
Do you know where is the Ganesha temple with human face?

இந்தக் கோயில் பித்ரு தோஷத்திற்கு பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலை திலதர்ப்பணபுரி என்றும் அழைப்பர். அதற்குப் பொருள் திலம் என்றால் எள். புரி என்றால் தலம். பித்ரு பூஜை செய்வதற்கு சிறந்த இடமாகும் என்று இதற்குப் பொருள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குள் சுமூகமான உறவு ஏற்படுவதற்கு இவரை வணங்க வேண்டும். இந்த இடம் காசி, ராமேஸ்வரம் போல மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு உகந்த இடமாகும். அமாவாசை அன்று விசேஷமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தை முக்தி க்ஷேத்திரம் என்றும் அழைப்பார்கள்.

ஸ்ரீவஞ்சியம் போல, வாழ்வில் பல தவறுகள் செய்தவர்களால் இந்த இடத்திற்கு வர இயலாதாம். நிச்சயமாக வந்துவிட வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது என்று நம்பப்படுகிறது. எனினும் வினைகளை நீக்கும் இந்த அதிசய விநாயகரை ஒருமுறையாவது தரிசித்து விட்டுச் செல்ல வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com