

தூக்கம் என்பது நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு நாள் தூக்கம் கெடுதல் கூட நமது உடலில் பல பிரச்னைகளை உண்டாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி தான் சிலருக்கு அடிக்கடி அதிகாலை நேரத்தில் முழிப்பு வந்துவிட்டு அதன் பிறகு தூக்கம் வராது. இதற்கு ஜோதிடத்தில் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
உண்மையில், பல இயற்கை சக்திகள் இந்த நேரத்தில் நம்முடன் இணைய முயற்சி செய்கின்றன. இந்த அதிகாலை நேரம் நேர்மறை ஆற்றலால் நிரப்பப்படுகிறது. இதை சரியாகப் பயன்படுத்தினால் நம் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். எனவே இந்த நேரத்தில் தூங்காமல் நல்ல முறையில் உபயோகப்படுத்தி கொள்ளுங்கள். அதனால் தான் பல கோயில்களில் அதிகாலை பூஜை முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இப்படி திடீரென முழிப்பு வரும்போது, படுக்கையில் இருந்து எழுந்து உட்கார வேண்டும். பிறகு நமது இஷ்ட தெய்வத்தை தியானித்து வழிபடவேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் வழிபாடு பல மடங்கு பலனை கொடுக்கும் என்பது நம்பிக்கை. இது போன்று செய்ய முடியாதவர்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்தால் மட்டுமே போதுமானதாகும். அதே பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
நள்ளிரவில் விழித்தெழுவது ஒரு கட்டத்தின் முடிவையும் புதிய ஒன்றின் தொடக்கத்தையும் குறிக்கிறது. அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையிலான நேரம் குறிப்பாக ஆன்மீகமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில், உடல் மற்றும் ஆன்மீக உலகங்களுக்கு இடையிலான எல்லை மிகவும் மங்கலாகிவிடும். இந்த நேரம் பிரார்த்தனை, சுயபரிசோதனை மற்றும் நேர்மறை அதிர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை எழுந்திருப்பது உங்கள் மனம் ஒரு புதிய தொடக்கத்திற்குத் தயாராகி வருவதைக் குறிக்கிறது.
இந்த அதிகாலை முழிப்புக்கு 3 காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக, பழைய மன அதிர்ச்சிகள் அல்லது நினைவுகள் இன்னும் உங்கள் மனதில் நீடிக்கின்றன. இரண்டாவதாக, கனவுகள் வாழ்க்கையில் சரியான திசையைக் காட்ட முயற்சிக்கின்றன. மூன்றாவதாக, நீங்கள் அறியாமலேயே பழைய பழக்கங்களையும் எண்ணங்களையும் விட்டுவிடுகிறீர்கள்.
பயப்பட ஒன்றுமில்லை. இது ஒரு பிரச்னையல்ல; ஆனால் உங்களுடன் நீங்களே தொடர்பு கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. ஒருவர் தியானம் செய்தால் நம்முடன் நாமே தொடர்பு கொள்ள முடியும் என பல பண்டிதர்கள் கூறுகிறார்கள். எனவே தியானமே இறைவனை தேடுவதற்கான முதல் படியாகும். இதை பயன்படுத்தி கொண்டு அதிகாலை நேரத்தில் முழிப்பு வந்தால் பெட்டில் புரண்டு கொண்டே இருக்காமல் உங்களுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இதன் மூலம் வாழ்க்கையில் பெரிய வெற்றி அடையலாம்.