மே 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்! செய்ய கூடியவை செய்யக் கூடாதவை என்னென்ன?

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை நீடிக்கும்.
Agni natchathiram
Agni natchathiram
Published on

பொதுவாக சித்திரை மாதம் வந்தாலே வெயில் சுட்டெரிக்கும் என்று நம்மில் பலர் ஏற்கனவே கவலைப்பட ஆரம்பித்து விடுகிறோம். இயற்கை மாற்றங்களின் காரணமாக, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாம் அதிக வெப்பத்தை உணர முடிகிறது. விஞ்ஞான ரீதியாகவும், உலகளவில் வெப்பநிலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டிருக்கிறது என்பதும் நமக்குத் தெரிந்த விஷயமே.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் இந்த வெப்பமான பருவத்தில், நம் உடலையும் மனதையும் பாதுகாக்க சிறந்த கவனம் தேவை. சரியான பழக்கவழக்கங்களை பின்பற்றினால், இந்த வெயில்காலத்தையும் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் கடக்க முடியும்.

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை நீடிக்கும்.

இந்த காலத்தில் செய்யக் கூடிய செயல்கள் என்ன? தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன? அதை தெரிந்து கொண்டு பின்பற்றுவோம்.

அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடியவை:

- தினமும் அதிக அளவில் தண்ணீர், இளநீர், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உணவில் சேர்க்கவும்.

- காரம், புளிப்பு, மசாலா அதிகமான உணவுகளைத் தவிர்த்து, எளிமையான உணவுகளை உட்கொள்ளவும்.

- விரதம் இருப்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

- திருமணம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற சுப காரியங்களை நடத்தலாம்.

- தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வாடகை வீட்டிற்கு குடியேறலாம்.

- வீட்டு அருகிலுள்ள விநாயகர் அல்லது சிவன் கோவிலில் பால், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற குளிர்ச்சி தரும் பொருட்களை அபிஷேகத்திற்காக வழங்கலாம்.

- தண்ணீர், நீர்மோர், விசிறி போன்றவற்றை தானமாக வழங்குவது மிகுந்த நன்மை தரும்.

- வீடுகள் அருகிலும், பொதுவாகவும் மற்ற உயிரினங்களுக்காக தண்ணீர் வைக்க வேண்டும்.

- மலர்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

அக்னி நட்சத்திரத்தில் செய்யக் கூடாதவை

1. மொட்டை அடிக்கவும், காது குத்தவும் கூடாது.

2. மரங்களை வெட்டுவதும், புதிய மரங்களை நடுவதும் தவிர்க்க வேண்டும்.

3. சொந்த வீடு, நிலம் வாங்குதல் அல்லது சொந்த வீடு குடியேறுதல் போல் பெரிய சொத்துச் சம்பந்தமான காரியங்களை ஒத்தி வைக்கவும்.

4. வெளிநாட்டு பயணங்களை திட்டமிடுவது தவிர்க்கவும்.

அக்னி நட்சத்திர காலம் என்பது வெப்பத்தையும், உடல் நலனையும் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான காலமாகும். இயற்கையின் கடுமையான வெப்பத்தை சமாளிக்க நாம் இந்த எளிமையான பழக்கங்களை மேற்கொள்வது அவசியம்.

அதேசமயம், இறைவனுக்கான சிறிய அர்ப்பணிப்புகளும், மற்ற உயிர்களுக்காக செய்யும் சிறு தானங்களும் நம்மை நலம் பெறச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
Say no to plastic: மைக்ரோபிளாஸ்டிக்ஸின் எழுச்சி - கண்ணுக்குத் தெரியாத மாபெரும் வீழ்ச்சி!
Agni natchathiram

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com