வருமானத்தைப் பெருக்கும் கண் திருஷ்டி பரிகாரம்!

வருமானத்தைப் பெருக்கும் கண் திருஷ்டி பரிகாரம்!

ற்காலத்தில் மனிதர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பொறாமையும் ஆற்றாமையும் கொள்வது அதிகமாக உள்ளது. இப்படிப்பட்டவர்களின் கண் திருஷ்டி சம்பந்தப்பட்ட நபருக்கு எதிர்மறையான தீமையைத் தரும் என்பதால்தான் எந்த ஒரு நிகழ்வு முடிந்ததும் திருஷ்டிக் கழிப்பது என்பது ஆண்டாண்டு காலமாக நமது பழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. எலுமிச்சம்பழம், உப்பு, மிளகு, மிளகாய், கற்பூரம், தேங்காய் போன்றவை திருஷ்டி கழிக்க உதவும் பொருட்களாக உள்ளன. அந்த வகையில், நமது முன்னோர்கள் சொல்லிச் சென்ற கைமேல் பலன் தரக்கூடிய திருஷ்டி பரிகாரம் ஒன்றை இந்தப் பதிவில் காண்போம்.

இதற்கு நமது வீட்டில் உள்ள கைப்பிடியளவு உப்பும் ஐந்து கருமிளகு மட்டும் இருந்தாலே போதும். நம்பிக்கையுடன் இந்தப் பரிகாரத்தைச் செய்து பாருங்கள். உங்களைச் சுற்றி இருக்கும் தீய சக்திகள், கண் திருஷ்டி போன்ற அனைத்தும் நீங்குவதோடு, உங்கள் வருமானமும் பல மடங்கு உயரும் என்பது நிச்சயம்.

இந்தப் பரிகாரத்தைச் செய்ய ஏற்ற நேரம் இரவு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இரவு 7 மணிக்கு மேல் உங்கள் உள்ளங்கையில் கைப்பிடியளவு உப்பும், ஐந்து கருமிளகையும் எடுத்துக் கொண்டு முதலில் உங்கள் தலையை மூன்று சுற்று வலது புறமாக சுற்றிக் கொள்ளுங்கள். அதேபோல், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் வீட்டின் வரவேற்பறையில் நிற்க வைத்து இதேபோல சுற்றுங்கள். இப்படிச் சுற்றும்போதே உங்களுக்கு இருக்கும் கண் திருஷ்டி, கெட்ட சக்திகள், கடன் அனைத்தும் நீங்கி, வருமானம் பெருக வேண்டும் என்று உங்கள் இஷ்ட தெய்வத்திடம் மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

இப்படி திருஷ்டி சுற்றிய பிறகு வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு உங்கள் வீட்டையும் இதேபோல் மூன்று முறை சுற்றிய பிறகு, அந்த உப்பையும், மிளகையும் ஒரு தேங்காய் சிரட்டையில் (கொட்டாங்குச்சி) போட்டு எரித்து விடுங்கள். இதை எரிக்கும்பொழுது தேங்காய் சிரட்டையில் இருந்து படபடவென்று வெடிக்கும் சத்தம் வரும். இது நம்மைச் சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள், கண் திருஷ்டி போன்றவற்றையெல்லாம் அடியோடு அழிக்கும் என்று சொல்லப்படுகிறது. உப்புடன் கருமிளகையும் சேர்த்து திருஷ்டி சுற்றும்போது நமது வீட்டில் ஏதேனும் கெட்ட சக்திகளின் தாக்கம் இருந்தால் அதுவும் இந்த திருஷ்டியில் கழிந்து விடக்கூடும். இந்தப் பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அதுவும் வளர்பிறை அஷ்டமி நாளில் செய்வது அதிகப் பலனை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

நம்மைச் சுற்றியுள்ள கண் திருஷ்டியும், கெட்ட சக்திகளும் நீங்கி விட்டால் நமது எண்ணமும் செயலும் தெளிவாகி விடும். இதனால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். ஆரோக்கியம் இருந்தால் நல்ல முறையில் உழைத்து வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும். இந்தப் பரிகாரத்தை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் நன்மைகள் சூழும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com