
புராணக்கதைப்படி முருகப்பெருமான் இரண்டு பெண் தெய்வங்களை மணந்தார். பழங்குடி தலைவரின் மகளான வள்ளியம்மையையும், இந்திரனின் மகளான தெய்வானையையும் மணந்தார். முருகப்பெருமானின் மனைவிகளான வள்ளி, தெய்வானை இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தியை குறிக்கிறார்கள். இச்சா சக்தி என்பது நம்முடைய விருப்பத்தின் சக்தி. கிரியா சாக்தி என்பது நம்முடைய செயல் சக்தி.
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நிறைய விருப்பங்கள் இருக்கும். வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும், நகை வாங்க வேண்டும் போன்ற விருப்பங்களை நிறைவேற்ற நாம் செயல்பட வேண்டும். அதற்கான செயல்படுவதற்கான சக்தி நமக்கு வேண்டும். என்ன தான் விருப்பமும், செயல்படுவதற்கான சக்தியும் நம்மிடம் இருந்தாலும் நாம் விரும்புவதும், செயல்படுவதும் முறையானது தானா? என்பதை அறியும் ஞானம் நம்மிடம் இருக்க வேண்டும்.
ஒருவருக்கு குறைவான அளவு சம்பளம் வருகிறது. ஆனால், அதிக விலையிலான சொத்துக்களை வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அதற்கு தவறான வழியில் செயல்பட்டால் தவறான வழியில் தான் சென்று முடியும். தன்னுடைய விருப்பம், அதை சார்ந்த செயல் சரியானது தானா? என்பதை தேர்ந்து தெளியும் ஞானம் ஆகிவற்றை அருளக்கூடிய தெய்வ மூர்த்தங்கள்தான் முருகப்பெருமானும், அவர்களது தேவியர்களான வள்ளியும், தெய்வானையும்.
வள்ளியம்மை நம்முடைய விருப்பத்தின் குறியீடு, தெய்வானை நம்முடைய செயலின் குறியீடு, முருகப்பெருமான் அந்த செயலும், விருப்பமும் சரியானது தானா? என்ற ஞானத்தின் குறியீடு. எனவே, வள்ளி தெய்வானையோடு இருக்கும் முருகப்பெருமானை வழிப்படுவோரின் விருப்பமும், செயலும் நெறிப்படி அமைந்து அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது உறுதி.