ஆம்! உலகில் ஏராளமான மர்மங்களும் மர்ம இனங்களும் உள்ளன என்பது உண்மையே. அப்படிப்பட்டவையில் ஒரு அதிசயமான விஷயத்தைப் பற்றியே இப்போது பார்க்கவுள்ளோம்.
ராமாயணத்தில் ராமரின் பக்தரான ஹனுமான் நாம் விரும்பும் ஒரு முக்கிய கடவுளாவார். சக்தியிலும், வார்த்தை ஜாலங்களிலும் சிறந்தவராக விளங்கிய இவர், ஒரு சிரஞ்சீவி என்பது நம் அனைவருக்குமே தெரியும். கலியுகத்தில் கல்கி அவதாரத்தின்போது ஹனுமானின் உதவி கண்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. பல வருடங்களுக்கு முன்னர் ஒரு புகைப்பட கவிஞர் ஹனுமான் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவரைப் புகைப்படம் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
அந்தப் புகைப்பட கலைஞர் இறந்திவிட்டதாகவும், ஆனால், அவருடைய புகைப்படம் மட்டும் இன்றும் பகிரப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஹனுமான் ஒரு குகைக்குள் இன்றும் தவம் செய்து வருகிறார், தேவைப்படும்போது மக்களுக்காக மீண்டும் வருவார். அந்தவகையில், ஹனுமான் ஒரு இனமக்களை பல வருடங்களுக்கு ஒருமுறை நேரில் வந்து சந்திக்கிறார் என்ற செய்தியும் பகிரப்பட்டு வருகிறது.
இலங்கையில் உள்ள ஒரு காடுகளில் வாழ்ந்து வரும் ஒரு இனம்தான் மதங் (Mathang) இனம். இவர்கள் இந்த நவீன உலகத்தைவிட்டு தள்ளியே இருக்கிறார்கள். அதாவது இந்த மாடர்ன் உலகத்தை போல் அல்லாமல், இன்றும் தங்களது பழைமையான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பின்பற்றி வருகின்றனர். இவர்களுக்கென தனி சட்டம், தனி வழிமுறைகள் என முழுவதுமாக தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். இவர்கள் ராவணன் தம்பி விபிஷணனின் வம்சாவளிகள் என்றும் கூறப்படுகிறது. அதனாலேயே இவர்களைப் பார்க்க ஹனுமான் 41 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறாராம்.
ராமர் சென்றப்பிறகு மிகவும் சோகத்துடன் ஹனுமான் இலங்கையில் உள்ள பித்ரு மலைக்குச் சென்று தவம் செய்ய தொடங்கியிருக்கிறார். அப்போது இந்த இன மக்கள்தான் அவருக்கு சேவை செய்து வந்திருக்கிறார்கள். ஹனுமான் தன் தவத்தினால், அஷ்ட சக்தி என்ற 8வது அறிவைப் பெற்றார். அப்போது அவருக்கு உதவி செய்த மதங் இன மக்களுக்கு ஒரு வரத்தை அளித்தார்.
ஒவ்வொரு 41 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் இடத்திற்கு வந்து தர்மம் மற்றும் அறிவு ஆகியவற்றை போதிப்பதாக வரம் அளித்தார். அதிலிருந்து ஹனுமான் அந்த இன மக்களுக்கு ஒரு குருவாக இருந்து வருகிறாராம். கடைசியாக அவர் மே 27ம் தேதி 2014ம் ஆண்டு அவர்களை சந்தித்திருக்கிறார். மீண்டும் அவர் 2055ம் ஆண்டு வருவார் என்பது அந்த மக்களின் எதிர்பார்ப்பு.
இது எப்படி இணையத்தில் கசிந்தது தெரியுமா? அந்த இன மக்களில் ஒருவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஒவ்வொரு 41 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து அவர் என்ன செய்தார், என்ன சொன்னார் போன்றவற்றை அந்த மக்கள் எழுதி வருகின்றனராம்.
உங்களுக்கு இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறதா?