சங்குகளின் வரலாறு மற்றும் பயன்களை தெரிஞ்சிக்கலாம் வாங்க!

History and Uses of Conches
History and Uses of Concheshttps://jvpnews.com

டல்களில் வாழக்கூடிய நத்தை போன்ற உயிரினமே சங்கு ஆகும். பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து வந்த மங்கலகரமான பொருட்களில் சங்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு ஆன்மிக விழாக்கள் தொடங்குவது என்றாலும் சங்கு முழுங்கியே தொடங்கி வைக்கப்படும். காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் கைகளில் சங்கும், சக்கரமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. எப்போதெல்லாம் சங்கு முழங்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தீயன அழிந்து நல்ல அதிர்வுகள் பரவும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், சங்கை காதுகளின் அருகில் கொண்டு சென்றால், அதிலிருந்து கடல் அலைகளின் ஓசை கேட்பதாக சொல்வார்கள். இது இயற்கையாகவே அதில் அமைந்துள்ள அதிர்வாகும். பூமியில் உள்ள அண்ட ஆற்றல் அதனுள் நுழையும்போது பெரிதாகப்படுவதின் வெளிப்பாடே இதுவாகும்.

சங்கிலிருந்து வரும் அதிர்வானது கெட்ட சக்தியை போக்கி பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும். சங்கு ஊதுவதால் பாசிட்டிவ் எண்ணங்களான தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை அந்த சத்தத்தை கேட்பவர்களுக்குக் கிடைக்கும்.

வலம்புரி சங்கு: சங்குகளில் பல வகைகள் உண்டு. அதில் வலது பக்கம் திறந்திருக்கும் சங்கை வலம்புரி சங்கு என்றும், இடது பக்கம் திறந்திருக்கும் சங்கை இடம்புரி சங்கு என்றும் கூறுவர். வலம்புரி சங்கு மிகவும் அரிதாகவேக் கிடைக்க கூடியதாகும். வலம்புரி சங்கு செல்வ செழிப்புகளை கொடுக்கக்கூடியது என்று நம்பப்படுகிறது.

வலம்புரி சங்கு மிகவும் அரிதானது என்பதால் அதை மங்கலகரமாகக் கருதுவார்கள். வலம்புரி சங்கை புனிதத் தலமான கோயிலிலும், வீட்டில் பண வரவு வரக்கூடிய இடமான லாக்கர் போன்றவற்றிலும் வைப்பதால் செல்வச் செழிப்பு அதிகரிக்கும். இந்த சங்கை வெள்ளை துணியால் சுற்றி வைக்க வேண்டும். சங்கு மகாலட்சுமியின் சின்னமாகக் கருதுவதால், வீட்டில் இருக்கும் துன்பங்களை நீக்கி வெற்றி, அறிவாற்றல், செல்வம் போன்றவற்றை தரக்கூடியதாகும்.

வாமவர்த்தி சங்கு: சங்கில் இடது பக்கம் திறந்திருந்தால் அதை வாமவர்த்தி சங்கு என்பார்கள். இது மிகவும் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியதாகும். கோயில் போன்ற இடங்களில் அதிகம் பயன்படுத்துவார்கள். சங்கில் பாசிட்டிவ் எனர்ஜி உருவாவதால் அதை எந்திரமாகவும் பயன்படுத்துகிறார்கள். சில ஜோதிடர்கள் கூட சங்கை வீட்டிலே சில இடங்களில் வைப்பதால், கிரகங்களின் பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறுவதுண்டு. இவ்வகை சங்கை ஊதுவதால், சுற்றியுள்ள இடங்களை தூய்மைப்படுத்துகிறது.

சங்குகள்
சங்குகள்https://www.facebook.com

கௌமிகா சங்கு: இந்த வகை சங்கு பசுவின் முகம் போல அமைந்திருப்பதால், இதை கௌமிகா சங்கு என்று அழைப்பார்கள். இந்துக்கள் பசுவினை மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள். அதைப் போலவே இந்த சங்கையும் புனிதமாகக் கருதுவதால், இதை வீட்டிலே பூஜை அறையில் வைப்பது, வீட்டில் பசுவை வைத்து பராமரிப்பதற்கு சமம் என்று கருதுகிறார்கள். இந்த சங்கு மகிழ்ச்சி, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை வீட்டில் இருப்பவருக்குத் தரும்.

கணேஷா சங்கு: இந்த சங்கையும் நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். இந்த சங்கு கடவுளான கணேஷரை குறிக்கிறது. வாழ்வில் இருக்கும் தடைகள், பிரச்னைகளை போக்கக்கூடியது என்று கூறுகிறார்கள். வீட்டில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றை தரக்கூடியதாகும். இது பாசிட்டிவ் எனர்ஜியை வீட்டில் பரப்புகிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் பயன்படுத்தியது பாஞ்சஜன்யம் எனும் சங்கு. இதற்கு பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. அர்ஜுனனிடம் இருந்த சங்கின் பெயர் தேவதத்தா. இந்த சங்கு வெற்றிகளைத் தேடி தருவதாகும்.

இதையும் படியுங்கள்:
ஆண்களுக்கான சிறந்த 10 பொழுதுபோக்குகள் தெரியுமா?
History and Uses of Conches

சித்த மருத்துவத்தில் சங்கு பற்பம் அஜீரணம், அசிடிட்டி, அல்சர், மூலம் போன்றவற்றை போக்கப் பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல், சருமப் பிரச்னையான முகப்பரு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

எனவே, சங்கு என்பது பழங்காலம் முதலிலிருந்து தற்போதைய காலம் வரை மக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது. சங்கின் பயன் அறிந்து அதை மருத்துவத்திற்கும் சித்தர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிலே சங்கை பூஜையறையில் கவிழ்த்து வைத்தே பூஜிக்க வேண்டும். இதை வடகிழக்கை நோக்கி வைத்து பூக்கள், சாம்பிராணி காட்டி வழிபடுவது சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com