ஓ! இதுதான் விநாயகர் சதுர்த்தியின் வரலாறா?

History of Ganesha Chaturthi
History of Ganesha Chaturthi!
Published on

இந்து மதத்தில் மிகவும் பிரபலமான விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் எனும் அறிவின் தெய்வத்தை வழிபடும் இந்த விழா, ஒவ்வொரு தனிநபர் மற்றும் சமுதாய நலனை உண்டாக்கும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் வரலாறு பண்டைய காலத்தினுடையது என்றாலும், இன்று நாம் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி காலப்போக்கில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்தப் பதிவில் விநாயகர் சதுர்த்தியின் வரலாறு, அதன் பின்னணி மற்றும் இன்றைய கொண்டாட்டங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

விநாயகரின் தோற்றம் மற்றும் புராணங்கள்: விநாயகரின் தோற்றம் பற்றிய பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. அதில் மிகவும் பிரபலமான கதை, பார்வதி தேவி செய்த களிமண் சிற்பத்தால் உருவான ஒரு சிறுவன் விநாயகராக உருவாக்கியதைப் பற்றியது. ஒருமுறை பார்வதி தேவி களிமண்ணை கொண்டு ஒரு சிற்பத்தை வடித்தார். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்ததால், அதற்கு உயிர் கொடுத்து தன் பிள்ளையாக மாற்றினார். அந்த சிற்பம் செய்யும் போது கையில் களிமண் பட்டுவிட்டதால், தன் பிள்ளையிடம் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என சொல்லிவிட்டு குளிக்கச் சென்றுவிட்டார்.

அப்போது சிவபெருமான் உள்ளே நுழைய முயற்சித்தபோது, சிறுவன் சிவபெருமானைத் தடுக்கவே, கோபமுற்ற சிவபெருமான் சிறுவனின் தலையைத் துண்டித்தார். பின்னர், பார்வதி தேவி வந்து நடந்ததைக் கூறி, சிறுவனுக்கு இன்னொரு தலையை ஏற்பாடு செய்யும்படி கட்டளையிட்டார். சிவபெருமானும், தன் பக்தர்களிடம் அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவ ராசியின் தலையை எடுத்து வரும்படி கூறினார். அவர்கள் முதலில் பார்த்த யானையின் தலையை எடுத்து வந்து  சிறுவனின் உடலில் பொருத்தினர். இவ்வாறுதான் விநாயகருக்கு யானை முகம் கிடைத்தது.  

விநாயகர் சதுர்த்தி வரலாறு: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் வரலாறு மிகவும் நீண்டது. இது மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டு வந்தாலும், பாலகங்காதர திலகர் இதை ஒரு தேசிய விழாவாக மாற்றியமைத்தார். இவர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேசிய உணர்வை வளர்ப்பதற்காக இந்த விழாவைப் பயன்படுத்தினார். அவர் விநாயகர் சதுர்த்தியை ஒரு சமூக நிகழ்வாக மாற்றி மக்களை ஒன்று திரட்டினர். 

இதையும் படியுங்கள்:
ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?
History of Ganesha Chaturthi

விநாயகர் சதுர்த்தி என்பது வெறும் மத விழா மட்டுமல்ல, இது சமூக ஒருமைப்பாடு, கலாச்சார பரிமாற்றம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த விழாவின்போது மக்கள் தங்கள் வீடுகளில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவார்கள். விழாவின் கடைசி நாளில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த நிகழ்வு இயற்கையுடன் நமது தொடர்பை நினைவுபடுத்துகிறது. 

இன்று விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவின்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், சமூக சேவை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. விநாயகர் சிலைகள் பல்வேறு அளவுகளில், வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. சிலைகள் பொதுவாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களாலேயே தயாரிப்பதால், அவை இயற்கை அமைப்புக்கு எவ்விதமான பாதகத்தையும் விளைவிப்பதில்லை. 

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com