
51 சக்தி பீடங்கள் எப்படி தோன்றியது என்பது அனைவரும் கேட்கக்கூடிய கேள்வியாகும். ஒருமுறை தட்சன், தான் நடத்தும் யாகத்திற்கு தன் மகள் தாட்சாயணி மற்றும் மருமகன் சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட தாட்சாயினி தன் தந்தை தக்ஷன் இடம் சண்டை போடுகிறார்.
"இந்த யாகத்திற்கு என் கணவர் ஈசனை ஏன் அழைக்கவில்லை?" என்று கோபமாக கேட்க, அதற்கு தக்ஷன் அலட்சியப்படுத்துகிறார். இதனால் கோபம் கொண்ட தாட்சாயினி "இனி எப்படி யாகம் நடக்கும்?" என்று கூறி அந்த இடத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.
இதை அறிந்த சிவபெருமான் கோபம் கொண்டு தாட்சாயனியை தன் உடம்பு மீது சுமந்து கொண்டு ஈரேழு உலகத்தையும் வலம் வந்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.
அவரது கோபத்தை தணிப்பதற்காக நாராயணன் தன் கையில் இருந்த சக்ரா யுத்தத்தால் பார்வதியின் உடலை 51 துண்டுகளாக்கி விட அவை வெவ்வேறு இடங்களில் வீசப்படுகின்றன.
அதன் பின்னர் சிவபெருமான் சாந்தமடைகிறார். அவ்வாறு சக்தி விழுந்த 51 துண்டுகளும் 51 சக்தி பீடமாக மாறுகிறது. இதுதான் வரலாறு. இதில் 18 பீடங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. பிரபலமான சக்தி பீடங்கள் காஞ்சி காமாட்சி, அசாமில் உள்ள காமக்கினி கோவில், மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில், இலங்கையில் உள்ள சங்கரி தேவி கோவில், கல்கத்தாவில் உள்ள காளி கோவில், பூரியில் உள்ள விமலா தேவி கோவில் ஆகும். இவை முக்கியமானதாக கருதப்படுகின்றன.
இனி தமிழகத்தில் உள்ள 18 சக்தி பீடங்களை பார்ப்போம்...
காஞ்சி காமாட்சி உடல் சம்பந்தப்பட்டது,
மதுரை மீனாட்சி கல்விக்கு அதிபதி,
ராமேஸ்வரம் பருவதவர்த்தினி,
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி,
திருவண்ணாமலை அபிதாகுஜாம்பால்,
திருவாரூர் கமலாம்பாள்,
கன்னியாகுமரி பகவதி அம்மன்,
கும்பகோணம் மங்களாம்பிகை,
திருக்கடையூர் அபிராமி அம்மன்,
திருவாலங்காடு மகாகாளி,
குற்றாலம் பராசக்தி,
குளித்தலை லலிதா,
பாபநாசம் உலகாம்பிகை,
திருநெல்வேலி காந்திமதி அம்மன்,
திருவெண்காடு பிரம்ம வித்யா,
திருவையாறு தர்மசம் வர்த்தினி,
திருவொற்றியூர் திரிபுரசுந்தரி,
தேவிபட்டினம் மகிஷா மர்த்தினி
ஆகிய கோவில்கள் முக்கியமானதாக கருதப்படுகின்றன.
இந்த கோவில்களுக்கு சென்று வந்தால் 51 பீடத்தையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.