ஹிந்து கடவுள்களை வழிபடும் இனமக்கள் உலக முழுவதும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தவகையில், தற்போது ஈரான் மற்றும் சிரியா நாடுகளின் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்கள் தமிழ்க் கடவுள் முருகனை வழிபடும் வினோதமான விஷயத்தைதான் இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.
ஈரான் மற்றும் சிரியா எல்லையில் உள்ள சிஞ்சார் மலைப்பகுதியைச் சுற்றி வசிக்கும் ஒரு இன மக்கள்தான் தமிழ்க் கடவுளான முருகனை வழிபடுகிறார்கள். இந்த இன மக்களின் பெயர் யசிடி ஆகும். இந்த இனத்தை ஏழு கடவுள்கள் தோற்றுவித்ததாகவும், அதில் முதலாவதாக சொல்லப்படுபவர், மயில் மேல் ஏறி வந்ததாகவும் நம்புகிறார்கள். மயில் மேல் ஏறி என்றால், மயிலை வாகனமாக வைத்திருக்கும் முருகர்தானே?
அந்த மக்கள் மயிலை சின்னமாக வணங்கி வருகிறார்கள். மயிலே இல்லாத அந்த நாட்டில், மயிலை வைத்து வணங்குகிறார்கள் என்றால், அது கட்டுக்கதையாக இருக்க முடியுமா?
யசிடி மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி பார்ப்போமா?
யசிடி மக்கள், மயில் வடிவைக் கொண்ட குத்து விளக்கை முத்தமிடுவார்கள். நமக்கும் குத்துவிளக்கைப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளதல்லவா?
அவர்களின் கோவில் கட்டடக்கலையும், நம்முடைய கோவில் கட்டடக்கலையும் ஒரே மாதிரித்தான் இருக்குமாம்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர்களின் கோவிலில் நுழைந்தவுடன், ஒரு புடவைக் கட்டிய பெண் குத்து விளக்கேற்றுவது போன்ற ஓவியம் இருக்கிறது.
அதேபோல் நுழைவாயிலில் பாம்பு சிற்பம் இருக்கும். எப்படியென்றால், முருகர் தன் மயில் வாகனத்தில் அமர்ந்திருப்பார், அந்த மயில் ஒரு பாம்பை மிதித்திருக்கும்.
யசிடி இன மக்கள், கைக்கூப்பி வணங்குவதையும், நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதையும் வழக்கமாக செய்து வருகிறார்கள்.
இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், இந்த மக்கள் முருகரை வழிபடுகிறார்களே தவிர, அவர் எந்த மதக் கடவுள் என்பதை அறியாதவர்கள். ஆகையால், எந்த மதத்திலும் சேராமல், முருகனை மட்டுமே வழிபடுகிறார்கள். ஒருகட்டத்தில் அந்த நாட்டில் அவர்களை எதோ ஒரு மதத்தில் இணைந்தே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டதால், ஓர் வழி தெரியாது, இஸ்லாமிய மதத்தில் இணைவதாக கூறிவிட்டார்கள். ஆனாலும், அவர்களை முருகனையே தங்களது கடவுளாக பாவித்துவருகிறார்கள்.
அப்படியென்றால், இவர்கள் முருகனை வழிபடும் இஸ்லாமியர்களா?