ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ‘ஜாலி அலங்காரம்’! எப்போ தெரியுமா?

Srirangam  ranganatha perumal
Srirangam ranganatha perumal
Diwali-Strip
Diwali-Strip

நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் அழகே உருவாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், பெரியாழ்வாரின் மாப்பிள்ளை என்று புராணம் கூறுகிறது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது. தீபாவளியை முன்னிட்டு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம் ரங்கநாதருக்கு செய்யப்படும். தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை ஐந்து மணிக்கு மேல் ரங்கநாதர் தனது ஆலயத்தில் பணியாற்றுபவர்களுக்கு சீயக்காய், நல்லெண்ணெய் வழங்குவர். அதனை நாமும் சிறிது பெற்று, மறுநாள் காலையில் தீபாவளியன்று நல்லெண்ணெய்யை தலையிலும், உடலிலும் தேய்த்து, சீயக்காய் போட்டு குளித்து ரங்கநாதரை வழிபட்டால் உடல் மற்றும் மன நோய்கள் தீர்ந்து போகும்.

தீபாவளி அன்று மாலை 4 மணிக்கு ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு முட்டைகளாக கட்டி ரங்கநாதர் திருவடிகளில் வேத பாராயணங்கள் முழங்க சமர்பிக்கின்றனர். இந்த திருச்சேவையை ‘ஜாலி அலங்காரம்’ என்கிறார்கள். இந்த அலங்காரத்தில் ரங்கநாதரை தரிசித்தால் வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை பக்தர்களுக்குக் காட்சி கொடுத்து அருள்வார்.

இதையும் படியுங்கள்:
பச்சை முட்டை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் தருமா?
Srirangam  ranganatha perumal

அதன்பின், கிளிமண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பெருமாள்முன் எழுந்தருளி, பெயர் சொல்லி அழைக்கப்படுவார்கள். அப்போது பெருமாள், அவர்களுக்குப் புதுவஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மலர், பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்து கௌரவிப்பார். பெருமாளிடம் தீபாவளிப் பரிசு பெற்ற ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள், பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கள் சந்நிதிக்குத் திரும்புவார்கள். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கநாயகித் தாயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் கலந்துகொள்ள மாட்டார்கள். இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடைகளுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com