கிட்ட தட்ட 76 வருடங்களில் ஶ்ரீ கஸ்தூரி ரெங்கநாதர் பெருமாள் கருட சேவையில் எழுந்தருளி சேவை சாதிப்பது மட்டுமல்லாமல் மற்ற பெருமாளுடன் அதுவும் முதல் முறையாக மன்னார்குடி கைலாசநாதர் கோயிலில் 12 உதயக் கருட சேவை சாதிப்பது மிகவும் விசேஷம்.
மன்னார்குடி சுற்றி உள்ள 12 கிராமங்களில் உள்ள பெருமாள் அவர் தம் ஊரிலிருந்து கருட சேவை வாகன சேவையில் எழுந்தருளி மன்னார்குடி ஶ்ரீ ராஜகோபால ஸ்வாமி சன்னதி முன்பு எழுந்தருளி அங்கிருந்து கடைதெரு வழியாக 12 பெருமாளும் ஒரு சேர கைலாசநாதர் சன்னதி அடைந்து பக்த கோடிகளுக்கு அருள் பாலித்தது கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.