குஜராத்தில் கர்பூர் என்ற இடத்தில் சுமார் 500 வருட பழமை வாய்ந்த ஸ்வாமிநாராயண் கோபிநாத் கோவிலில் அருள் பாலிக்கும் கிருஷ்ணர் தனது கையில் கை கடிகாரம் அணிந்திருப்பார்! இதற்கு பின் ஒரு உண்மை சம்பவம் இருக்கிறது.
ஐம்பது வருடங்கள் முன்பு பிரிட்டனை சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி இந்த கோவிலுக்கு வந்திருந்த போது அவரிடம் கோயிலின் பட்டர் அங்கு இருக்கும் கிருஷ்ணர் விக்ரகம் உயிரோட்டம் கொண்டது என்று கூறியுள்ளார். இதை நம்பாத அந்த பிரிட்டிஷ்காரர் தன கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பட்டரிடம் கொடுத்து கிருஷ்ண விக்ரகத்தின் கையில் கட்டச் சொல்லி இவ்வாறு கூறினார்... "இந்த வாட்ச் நம் நாடி துடிப்பினால் மட்டுமே ஓடக்கூடியது. கிருஷ்ணர் கையில் இது ஓடினால் நீங்கள் சொல்வது உண்மை என்று நம்புகிறேன்!"
பட்டரும் அந்த வாட்சை வாங்கி கிருஷ்ண விக்கிரகத்தின் கையில் கட்டினார். பிரிட்டிஷ் காரர் தன் கையிலிருந்து கழட்டியவுடன் நின்ற வாட்ச் கிருஷ்ணர் கையில் கட்டியவுடன் ஓட ஆரம்பித்தது. இன்றும் அந்த வாட்சை இந்த கிருஷ்ணர் கையில் நாம் பார்க்கலாம். தினமும் கிருஷ்ணருக்கு அலங்காரம் செய்யும் போது பட்டர் அதை கழட்டி மறுபடியும் அணிவிப்பார். கழட்டும் போது அது நிற்கும். பின்பு அணிவிக்கும் போது ஓட ஆரம்பிக்கும்.