

குலதெய்வம் என்பது நமக்கு தேவையான அனைத்து நல்ல விஷயங்களையும், வாழ்க்கைக்கு தேவையான முன்னேற்றத்தையும் அருளக்கூடிய தெய்வம். நமக்கு வரக்கூடிய ஆபத்தை முன்பே தடுக்கும் சக்தி கொண்டது தான் குலதெய்வம். அத்தகைய குலதெய்வத்தின் கோவிலுக்கு வருடத்திற்கு ஒருமுறையாவது சென்றுவிட்டு வருவது வாழ்க்கைக்கு சிறப்பையும், மேன்மையையும் தரும்.
ஒருவருக்கு இஷ்ட தெய்வங்கள் பல இருக்கலாம். ஆனால் குலதெய்வம் (family Deity) ஒன்று மட்டும் தான் இருக்க முடியும். சுப விசேஷங்கள் அல்லது தொழில் சார்ந்த விசேஷங்கள் எதுவாக இருந்தாலும் குலதெய்வத்தை வழிப்பட்ட பிறகு ஆரம்பித்தால் அந்த விஷயத்தில் வெற்றியும் முன்னேற்றமும் அதிகமாக இருக்கும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
குலதெய்வம் கோவிலுக்கு சென்று அங்கிருந்து எடுத்துவரப்படும் சக்தி வாய்ந்த மண்ணை உங்கள் வீட்டு வாசலில் சிகப்பு அல்லது மஞ்சள் துணியில் கட்டி வைத்தால் அதிகமான கண் திருஷ்டிகள் அகலும். இந்த மண் நம் வீட்டில் இருப்பது அந்த குலதெய்வமே நம்முடன் இருப்பது போன்ற சக்தியை தரும்.
குலதெய்வத்தின் பாதம்பட்ட மண் நம் வீட்டில் இருக்கும் தீயசக்திகளை விரட்டும். அடுத்தமுறை குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது இந்த மண்ணை நீர்நிலையில் கரைத்துவிட்டு புதிய மண்ணை வீட்டிற்கு எடுத்து வரவேண்டும்.
குலதெய்வத்தின் மடியிலிருந்தோ அல்லது பாதத்திலிருந்தோ எழுமிச்சைப் பழத்தை எடுத்து தருவார்கள். இந்த பழத்தை எடுத்து வந்து அப்படியே பூஜையறையில் லைக்கும் போது குலதெய்வத்தின் சக்தி நம் வீட்டில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை படிக்கும் இடங்களில், தொழில் செய்யும் இடங்களிலும் இந்த எழுமிச்சைப்பழத்தை வைக்கலாம். இதனால் குடும்பம் ஆரோக்கியமாகவும், செல்வ செழிப்புடனும் இருக்கும்.
குலதெய்வம் கோவிலில் தீமிதிக்கும் பழக்கம் இருந்தால், அந்த சாம்பலை எடுத்து வருவது மிகவும் நல்லது என்று சொல்கிறார்கள். அதை ஒரு டப்பாவில் போட்டு பூஜையறையில் வைத்துக் கொண்டு அதை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் காரியத்தடை நீங்கும், வெற்றிக் கிடைக்கும்.
குலதெய்வம் சந்தனம் அணிந்திருந்தால் அதை எடுத்து வந்து வீட்டில் வைப்பதன் மூலம் தொழில் முன்னேற்றம், வேலையில் பதவி உயர்வு, கல்வியில் ஞானம் இதுப்போன்ற விஷயங்களை தரக்கூடிய பொருளாக கருதப்படுகிறது. மேலும் சந்தனம் பொருளை ஈர்க்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது.
குலதெய்வத்திடம் தாலி சரடை வைத்து அர்ச்சனை செய்து அதை சுமங்கலி பெண்கள் அணிந்துக்கொண்டால், தீர்க்கசுமங்கலியாகவும், நல்ல ஆயுளும், கணவன் மனைவி ஒற்றுமையும் அதிகரிக்கும்.
இந்த 5 பொருட்களையும் குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது தவறாமல் எடுத்து வாருங்கள். குலதெய்வம் கோவிலில் விளக்கு ஏற்றும் போது அகல் விளக்காக இருக்க வேண்டும். அதில் நெய், இழுப்பை, நல்லெண்ணெய்யில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும். அந்த அகலுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு தீபம் ஏற்ற வேண்டும்.