மகாபாரதம் நமக்குத் தெரிந்தது தான். நிறையக் கதாபாத்திரங்கள். ஆனால் முக்கியக் கதாபாத்திரங்கள் ஒன்பது பேர். இவர்களுக்கும் நவக்கிரகங்களும் என்ன ஒற்றுமை என்பதைப் பார்க்கும் பதிவு இது. இந்த ஒன்பது பேரும் ஒன்பது குண சாரம்சத்தைப் பெற்று இருப்பது ஆச்சரியமான ஒன்றாகும்.
'குரு'வின் அம்சமாக விளங்கியவர் தருமர். குருவின் குணமாகிய நீதி, தர்மம் பொறுமை என்னும் குணங்களுடன் செயல்பட்டார்.
'செவ்வாயின்' அம்சம் பெற்ற அர்ஜுனன், வீரம், சூரம், அத்துடன் காம இச்சை அதிகம் உள்ளவனாக இருந்தான்.
'சூரியனின்' அம்சமாக விளங்கியவன் கர்ணன். சூரியனைப் போலக் கொடையாளி, கர்ம வீரன்.
'சந்திரனின்' அம்சமாக விளங்கியவன் கண்ணன். சந்திரனின் குணத்தைப் பெற்று அவன் அழகனாகவும், பெண்களுக்குப் பிரியப்பட்டவனாகவும் அவர்கள் மேல் காதல் கொண்டவனாகவும் இருந்தவன்.
'புதனின்' அம்சமாக விளங்கியவன் சகாதேவன். ஜோதிடம், கணிதம் ஆகியவற்றை அறிந்தவன், பொறுமைசாலி.
'கேதுவின்' அம்சமாக விளங்கியவன் நகுலன். கேதுவின் குணத்தைப் பெற்று மருத்துவனாகவும் குதிரை மொழி தெரிந்தவனாகவும் இருந்தவன்.
'சனியின்' அம்சம் சகுனி. சூதாட்டம் விளையாட்டில் வல்லவன். பிறர் சந்தோசத்தைப் பொறுத்து கொள்ளாதவன். சனியைப் போல் சாய்ந்து சாய்ந்து நடப்பவனாக இருந்தான்.
'சுக்கிரன்' அம்சம் பாஞ்சாலி. சுக்கிரனின் குணம் காம சுகம் கொடுத்தல். ஐவருடன் குடும்பம்.
'ராகுவின்' அம்சம் துரியோதனன். ராகுவின் குணமான பழி வாங்குதல் எண்ணத்தைக் கொண்டவன். தன்னைப் பார்த்துச் சிரித்த பாஞ்சாலியைப் பழி வாங்கும் எண்ணத்துடன் அவள் துகிலை உரித்தான்.