மகரவிளக்கு பூஜை: சபரிமலை நடை திறப்பு எப்போது தெரியுமா?

Sabarimala Temple open
Sabarimala Temple open

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் முதல் தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ கூட இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, இருமுடி கட்டி, பதினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு ஆண்டு (2023) மண்டல - மகரவிளக்கு சீசன் முதல் அடுத்த ஆண்டு (2024) மண்டல சீசன் வரை நடை திறப்பு குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் கால அட்டவணை வெளியிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நவம்பர் மாதம் 17ம் தேதி தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று முதல் தொடர்ந்து 41 நாட்கள் சபரிமலையில் நடை திறந்திருக்கும். அதன் பிறகு 27ம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
சாபத்தால் கல்லாக மாறும் மனிதர்கள்; இந்தக் கோயிலின் இரகசியம்தான் என்ன?
Sabarimala Temple open

அதன் பிறகு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அதையடுத்து, 31ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 20ம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகளின் தரிசனத்திற்குப் பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெற உள்ளது.

இந்த நாட்களில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்கான தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியாகியுள்ளன. ஐயப்பனை தரிசனம் செய்யவுள்ள பக்தர்கள் https://sabarimalaonline.orgSabarimala Online (Official Website)  எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com