30 வயதாகியும் பெண்களுக்குத் திருமணத் தடையா?

Woman thinking
Woman

- தா. சரவணா

இப்போதுள்ள சூழலில், 40 வயதைக் கடந்தவர்களில் பலர் திருமணமாகாமல் பேட்சுலர்களாக இருந்துவருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், ஜாதகப் பொருத்தம் சரியாக அமையவில்லை என்பதுதான் பலரின் ஆதங்கமாக உள்ளது. ஆனாலும், எதுவுமே பார்க்காமல், காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் மனமொத்தவர்களாக சந்தோஷத்துடன் வலம் வருகின்றனர். இது பலருக்கும் குழப்பமாக உள்ளது. இது குறித்து மன்னார்குடியைச் சேர்ந்த ஜோதிட சுடரொளி அன்னபூரணி கூறுகையில், “முப்பது வயது கடந்தாலும் திருமணப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை. முன் காலத்தில் திருமணத்தை நிர்ணயம் செய்தது பெற்றோரும் உறவினரும். ஆனால் இன்று பெற்றோரே பிள்ளைகள் வாழ்வில் பொருத்தம் என்று காரணம் காட்டி அவர்களுக்கு முப்பது வயது கடந்தும் திருமணத் தடையை தருகின்றனர். பத்து பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே போதுமா? இந்த 10 பொருத்தங்கள் இல்லாதது மட்டுமே தடையாகிவிடுமா? இன்னும் எத்தனையோ காரணங்கள் உண்டு திருமணம் தாமதமாவதற்கு.

ஒரு சிலருக்கு பத்து பொருத்தங்கள் இருந்தாலும், திருமண வாழ்க்கை இனிமையாக இல்லை. ஒரே நட்சத்திர ராசியினருக்குத் திருமணம் முடிவதால், அவர்களுக்கு அடுத்தடுத்து ஒரே தசையாக செல்வதால், நல்ல தசைகள் வரும்போது அவை மகிழ்ச்சியையும், கெடு தசைகள் வரும்போது அமைதி இன்மையையும் தந்துவிடும்.

முப்பது வயது கடந்தும் திருமணம் ஆகாதவர்கள், சில பரிகாரங்கள் செய்து வரலாம்.

இதையும் படியுங்கள்:
குலம் தழைக்கச் செய்யும் வைகாசி விசாக வழிபாடு!
Woman thinking

காமாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம், மாலை, மஞ்சள் அணிவித்து சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தந்து வாருங்கள். தூமகேது விநாயகருக்கு கல்யாண அர்ச்சனை செய்து வாருங்கள். திருமணஞ்சேரி, திருநீர்மலை, திருவிடந்தை ஆகிய இடங்களில் நித்திய கல்யாண பெருமாள் வழிபாடு, திருமங்கலகுடி, திருப்பரங்குன்றம் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் வழிபாடு, வெள்ளிக்கிழமை துர்க்கை வழிபாடு, குடும்பத்தில் சுமங்கலியாக இறந்தவரை வழிபடுவது, பித்ருசாப நிவர்த்தி செய்வது, பெண்கள் துளசி பூஜை செய்வது, திருக்கோயில்களில் நடைபெறும் இறைவன் இறைவி திருக்கல்யாணங்களில் கலந்துகொள்வது, ஏழை சுமங்கலிப் பெண்களுக்குத் திருமண உதவி செய்வது, உறவினர் இல்லங்களில் நடக்கும் விழாக்களில் கலந்துகொள்வது, இதுபோன்று சிறப்பான சமூக நலன் மிகுந்த காரியங்களை மனமுவந்து செய்துவருவதால் திருமணத் தடைகள் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கும்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com