இரவில் மட்டுமே திறந்திருக்கும் அதிசயக் கோயில்!

Miraculous temple that opens only at night
Miraculous temple that opens only at night

பொதுவாக, அனைத்துக் கோயில்களும் அதிகாலையில் நடை திறந்து இரவில் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால், மதுரையில் உள்ள ஒரு கோயில் இரவில் மட்டுமே திறந்திருக்கும் என்பது அதிசயமான உண்மை.

காலதேவி அம்மன் கோயில் சூரியன் மறைந்ததும் திறக்கப்பட்டு, மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு நடை சாத்தப்படுகிறது. இந்தக் கோயில் மதுரை மாவட்டம் சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி என்ற கிராமத்தில் உள்ளது. உலகிலேயே இரவு முழுவதும் திறந்திருக்கும் ஒரு கோயில் என்றால் அது இதுதான்.

இந்தக் கோயிலில் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் கூட்டம் மிகுதியாக இருக்கும். பொதுவாக, ஒருவரின் நல்ல மட்டும் கெட்ட நேரங்களை தீர்மானிப்பது அவருடைய ராசி மற்றும் நட்சத்திரங்கள். இந்தக் கோயிலில் 27 நட்சத்திரங்கள் 9 நவகிரகங்கள் மற்றும் 12 ராசிகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறார் இந்த கோயிலின் மூலவர் தெய்வமான கால தேவி அம்மன்.

கோயில் கோபுரம்
கோயில் கோபுரம்

கோயில் கோபுரத்திலேயே 'நேரமே உலகம்' என்று பொறிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, ஒருவருடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அவருடைய நேரம்தான் வழி வகுக்கிறது என்பதை சொல்கிறது இந்த வாசகம். புராணங்களில் காணக்கூடிய காலராத்திரியைத்தான் இந்தக் கோயிலில் கால தேவியாக வழிபடுகின்றனர். அவருடைய இயக்கத்தில்தான் 14 லோகங்களும் பஞ்சபூதங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் செயல்படுகின்றன என்று நம்புகின்றனர் மக்கள். இந்தக் கோயிலின் கருவறையும் விமானமும் எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் கோமதி சக்கரம்!
Miraculous temple that opens only at night

நேரம் சரியில்லை என்று ஜோதிடர்கள் சொன்னால் அதற்கான பரிகாரத்தில் மக்கள் இறங்குவார்கள். இந்த கால தேவி அம்மன் கோயிலில் வந்து வழிபாடு செய்தால் கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறும் என்பது மக்களின் நம்பிக்கை. கோயிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும். கெட்ட நேரம் அகன்று, நல்ல நேரம் வரும் என்பது மக்களின் தீராத நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com