பித்ரு தோஷம் நீங்கி ஆசி பெறவேண்டுமா? 'மோட்ச தீபம்' ஏற்றும் முறையும் பலன்களும்!


Moksha Deepam
Moksha Deepam
Updated on

மோட்ச தீபம் என்பதன் பொருள்

வாழ்க்கையில் இருள் நீங்கி இன்னல் நீங்கி ஏற்றம் பெறுவதற்கு கோயிலில் விளக்கு ஏற்றுவது நல்லது.மோட்ச தீபம் என்றால் முன்னோர்கள் மறைந்தாலும் நம்முடைய மனதில் மறவாமல் இருக்ககூடிய முன்னோர்கள் இறந்த திதியில் ஏற்றக்கூடிய ஒரு விளக்கு.  நிறைய பேர் ஆர்வம் மிகுதியில் உயிர் இழந்தவர்களின் படத்திற்கு அனைத்து நாட்களும்  தீபம் ஏற்றுகின்றனர். வீட்டில் ஏற்றுவதைவிட கோயிலில் ஏற்றுவது சிறப்பு என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

மோட்ச தீபம் முக்கியத்துவம்

மோட்ச தீபம் முதன் முறையாக முன்னோரின் திதி வரக்கூடிய நாளில் ஏற்றவேண்டும். நாம் வயிற்றில் கருவாக உண்டாகும்போதே வாழ்க்கையில் இது எழுதப்பட்டு விடும் 

எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒரு சில தடைகளால் வாழ்க்கையில் முன்னேற்றம் தாமதமாகும். அப்படியான தடைகளை விதிகளை மாற்றுவதற்கு ஒரு சில திதிகள் உண்டு முன்னோர்களின் இறந்த திதியை சரியாக கணக்கிட்டு விளக்கு ஏற்றினால் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும். ஒரு சில நாட்களிலேயே வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம்.

மோட்ச தீபம் ஏற்றும் நாளும், நேரமும்

உங்களுடைய பரம்பரை தலைமுறை நன்மைக்காக மோட்ச தீபம் ஏற்றுங்கள். முன்னோரின் திதி தெரியவில்லை என்றால் சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் மோட்ட தீபம் ஏற்றுங்கள்.

முன்னோரின் திதி நாள்.

சனிக்கிழமை.

அஷ்டமி திதி.

நவமி திதி

அமாவாசை திதி

பிரதமை திதி.

ஆகிய நாட்களில் மோட்ச தீபம் ஏற்றலாம்.

உங்களுடைய வீட்டில் தீபம் ஏற்றுவதைவிட கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது சிறப்பு. கடற்கரை, ஆலமரம், அரசமரம் வேப்ப மரங்களின் அடியில் மோட்ச தீபம் ஏற்றி முன்னோர்களிடம் வேண்டிக்கொள்ளுங்கள். அப்பா, அம்மா தாத்தா, பாட்டி நம்முடன் வாழ்ந்த பலரின் அருமை பெருமை உயிருடன் இருக்கும்போது புரிவதில்லை. அவர்கள் அனைவருமே நம்முடைய நன்மைக்காக சிரமப்பட்டவர்கள்.

இதற்கு ஒரு சிறிய தீபம் ஏற்றினால் மோட்சம் கிடைக்கும். மோட்ச தீபம் தொடர்ந்து ஏற்றுவதால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் தீய குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி நல்ல எண்ணங்கள் வளரும்.

இதையும் படியுங்கள்:
17 ஆண்டுகளுக்குப் பிறகு... மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேகம்! எப்போ?

Moksha Deepam

மோட்ட தீபம் ஏற்றும் சில முக்கிய கோவில்கள்

திருச்சுழி திருமேனிநாதர் கோயில் மற்றும் திருபுவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் ஆகும் இவை தவிர பொதுவாக சிவன், பெருமாள் மற்ற அனைத்து சிவாலயங்கள் பெருமாள் கோயில்களின் கோபுர உச்சியில் மாலை பொழுதில் மோட்ச தீபம் ஏற்றலாம். முன்னோர்களின் திதி, சனிக்கிழமை, அஷ்டமி /நவமி அமாவாசை, பிரதமைதிதி, போன்ற நாட்களில் மோட்ச தீபம் ஏற்றுவது சிறப்பு.

மோட்ச தீபம் ஏற்றி முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com