முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

Lord Murugan
Lord Murugan

முருகப்பெருமானுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள்? ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணம் உண்டு. வேல் வைத்திருப்பதால் முருகப்பெருமானை வேலவன் என்றும், வள்ளியின் கணவர் என்பதால் வள்ளி மணாளன் எனவும் அழைக்கப்படுகிறார்.

முருகன் என்றால் அழகன் என்றும் பொருள். குகன் என்றால் பக்தர்களின் மனமாகிய குகையில் இருப்பவன் என்றும், விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் எனவும், மற்றொரு காரணமாக விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் அதாவது மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன் எனவும் அழைக்கப்படுகிறான்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் மூலம் உருவானவர் என்பதால் 'அக்னி கர்ப்பன்' என முருகனுக்குப் பெயர் உண்டு. அந்தத் தீப்பொரிகள் கங்கையில் தவழ்ந்ததால் 'காங்கேயன்' எனவும் அழைக்கப்படுகிறார்.

ஆறுமுகன் சரவணப் பொய்கையில் வளர்ந்ததால் சரவணன் எனவும் சரவணபவன் எனவும் , ஆறெழுத்து மந்திரமாக ஓம் சரவணபவ என்றும் கூறுகிறோம். கார்த்திகை பெண்கள் அறுவர். அந்த அழகனை வளர்த்ததால் கார்த்திகேயன் எனவும், பார்வதி தேவி அன்போடு அந்தக் குழந்தைகளை ஒன்று சேர்த்து அணைத்ததால் ஆறுமுகமும் ஒன்றாகி கந்தன் எனவும் பெயர் பெற்றார்.

இதையும் படியுங்கள்:
லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!
Lord Murugan

இப்படி முருகனுக்கு மட்டும் வேலன், கடம்பன், வடிவேலன், சிங்காரன், ஆறுமுகன், சேவற்கொடியோன், சுவாமிநாதன், மால்மருகன், விசாகன், குருபரன், குமரகுரு, குமரன், குகன், தண்டபாணி, மயூர வாகனன், முத்துக்குமரன், கந்தவேல், சுப்பிரமணியன் என ஏகப்பட்ட பெயர்கள் உள்ளன.

அதேபோல், முருகப் பெருமானுக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு. முருகப்பெருமான் ஆறுமுகங்கள் கொண்டவர். இவரை வளர்த்த கார்த்திகை பெண்கள் ஆறு பேர். அறுபடை வீடுகள் சிறப்பு பெற்றது. ஆறெழுத்து மந்திரத்திற்கு உரியவர். ஆறு முகங்களைக் கொண்டதால் ஆறுமுகன் என பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர் முருகப்பெருமான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com